நடிகருடன் மீண்டும் காதலை ரீசார்ஜ் செய்த பிரபல நடிகை.. இந்த முறையாவது குட் நியூஸ் சொல்லுவார்களா!

பழைய நட்சத்திர காதல் ஜோடி ஒன்று தங்களது காதலை மீண்டும் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது.

Recommended Video

நடிகருடன் மீண்டும் காதலை ரீசார்ஜ் செய்த பிரபல நடிகை.

சென்னை: பழைய காதல் ஜோடி ஒன்று தங்களது காதலை மீண்டும் புதுப்பித்துக்கொண்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி அவர்கள். இருவருமே முன்னணி இடத்தில் இருந்ததால் அவர்களது காதல் கதை தான் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது.

இருவருக்குமே பெரிய குடும்பப் பின்னணி இல்லாததால் அவர்களே தங்களது திருமணத்தை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிகை திடீரென இயக்குனர் ஒருவரால் பிரச்சினையில் சிக்கினார். தலைமறைவான நடிகை படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார்.

மீண்டு வந்த நடிகை

மீண்டு வந்த நடிகை

சிலகாலம் கழித்து மீண்டும் புதிய படங்களில் ஒப்பந்தமானார் நடிகை. நடிப்புக்கு பெயர் போனதால் தமிழ் திரையுலகம் மீண்டும் அவரை ஏற்றுக்கொண்டது. தற்போது ஒரு சில படங்களில் நடிகை நடித்து வருகிறார்.

காதலரின் படங்கள்

காதலரின் படங்கள்

இதற்கிடையே நடிகையின் காதலரான பிரபல நடிகர், ஒரு சில படங்களில் நடித்தார். அப்படங்கள் சொல்லிக்கொள்வது போல் பெரிய வெற்றியையும் தரவில்லை, தோல்வியையும் தழுவவில்லை. இதனால் நடிகரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்

ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்

இது ஒருபுறம் இருக்க இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நடிகரும், நடிகையும் பிரிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் திடீரென ஒருநாள், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது. திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் எனக் கூறப்பட்டது.

வெளியூர் படப்பிடிப்புகள்

வெளியூர் படப்பிடிப்புகள்

இந்நிலையில் மீண்டும் பகிரங்கமாகவே தங்களது காதலை வெளிக்காட்ட தொடங்கி உள்ளனர் இருவரும். வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கும் நடிகையின் உடனேயே நடிகரும் செல்கிறாராம். எப்போதும் அவருடனேயே இருக்கிறாராம்.

திருமணம் நடக்குமா?

திருமணம் நடக்குமா?

இருவருக்குமான உறவை நன்கு புரிந்துகொண்டதால், தயாரிப்பாளர்களும் இருவருக்கும் ஒரே அறையை ஒதுக்கி தருகிறார்களாம். எப்படியோ இம்முறையாவது அவர்களது காதல் திருமணத்தில் முடிந்தால் சந்தோஷம் தான் என்கிறார்கள் கோலிவுட்டில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X