எனக்கும் சான்ஸ் கொடுங்க.. புதிய ரியாலிட்டி ஷோ பிரபலத்துக்கு வாய்ப்புகள் குவிவதால் கடுப்பான எக்ஸ்!

By Staff

சென்னை: புதுசு புதுசா ரியாலிட்டி ஷோ மூலமாக சீரியல் நடிகைகள் எல்லாம் ஹீரோயின்களாகி வருகின்றனர்.

போன சீசன் மூலம் பிரபலமானவர்களுக்கு கிடைத்து வந்த சினிமா வாய்ப்புகள் தற்போது புதிய வரவுகளுக்கு கிடைக்க ஆரம்பித்துள்ளன.

இதனால், ரியாலிட்டி ஷோ மூலம் நடிகையான முன்னாள் போட்டியாளருக்கு பெரிய சிக்கல் உருவாகி உள்ளதாம்.

கடல் கடந்து

கடல் கடந்து

கடல் கடந்து சினிமாவில் சாதிக்க நினைத்த அந்த பிரபலம் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு காதல் நாடகங்களை நடத்தி ரசிகர்களின் ஃபேவரைட் ஆனார். அவர் நினைத்தது போலவே நிகழ்ச்சி முடிந்ததும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அவரும் வந்த வாய்ப்புகளை அப்படியே வாரிக் கொண்டார்.

யோசிக்காமல்

யோசிக்காமல்

எந்தவொரு முன் யோசனையும் இன்றி பட வாய்ப்புகள் குவிகிறதே என டாப் நடிகர்கள் அல்லாத ஹீரோக்கள் படங்களில் புக்கான நிலையில், தற்போது புதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் அப்படியே தேங்கிய நீராக ஒதுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே புக் ஆன படங்களும் ரிலீஸ் ஆகாமல் ரொம்பவே அவரை சோதித்து வருகிறதாம்.

ஃபிரெஷ் பீஸ்

ஃபிரெஷ் பீஸ்

முந்தைய சீசன் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டுக் கிடக்கும் நிலையில், ஃபிரஷ் பீஸ்களுக்கு ரியாலிட்டி ஷோ முடித்த கையோடு டாப் நடிகர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவது பலரையும் பொறாமையில் ஆழ்த்தி உள்ளது.

நடிகை அப்செட்

நடிகை அப்செட்

இதில் கடல் கடந்து பல கனவுகளுடன் வந்த அந்த பிரபலம் ரொம்பவே அந்த புதிய வரவால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் எல்லாம் இப்படி அடுத்த சீசன் போட்டியாளருக்கு போகிறதே என புலம்பித் தள்ளி வருகிறாராம். இப்படியே போனால் மீண்டும் சொந்த ஊருக்கே டிக்கெட் போட வேண்டியது தான் என்றும் பெருத்த சோகத்தில் உள்ளாராம் அந்த நடிகை.

ஆரம்பமே ஃபிளாப்

ஆரம்பமே ஃபிளாப்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகையின் முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்காமல் சொதப்பிய நிலையில், ஏற்கனவே கைவசம் உள்ள ஒரு சில படங்களை தவிர்த்து வேறு எந்த கம்பெனியும் நடிகைக்கு புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய முன் வரவில்லையாம். டாப் ஹீரோயினாக வேண்டும் என்கிற கனவுகள் எல்லாம் இப்படி தவிடு பொடி ஆகிவிட்டதே என நினைத்து வருந்தி வருகிறாராம்.

கைவிட்ட காதலர்

கைவிட்ட காதலர்

ரியாலிட்டி ஷோவில் காதல் டிராமா நடத்திய நிலையில், சினிமாவில் அந்த நடிகர் சிறப்பாக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்து ஹிட் அடித்து வருகிறார். அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தாலாவது ஒரு நல்ல மார்க்கெட்டை சினிமாவில் பிடித்து விடலாம் என நினைத்து அவருக்கு விட்ட தூதும் ஒர்க்கவுட் ஆகவில்லையாம். அதனால், அம்மணி ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதை விட நல்ல கதையை தேர்வு செய்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினால் தான் நீடிக்க முடியும் என்பதை இப்போதுதான் அவர் புரிந்து கொண்டிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X