பணத்திற்காக வரம்பு மீறிய நடிகை.. இணையத்தில் கசிந்த போட்டோ.. டேமேஜான நடிகையின் இமேஜ்!
சென்னை: மாடலிங் துறையில் இருந்து வந்து, ஒரு முன்னணி தொலைக்காட்சியில் 'விஜே'வாகத் தனது கேரியரைத் தொடங்கியவர் அந்த நடிகை. அதன் தொடர்ச்சியாக, தெலுங்கின் முன்னணி ரவுடி ஹீரோவின் தமிழ் படத்தில் ஒரு போல்டான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கோலிவுட்டில் மாஸ் நடிகரின் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்த அந்த நடிகைக்கு, மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார்.
ஆனால், அங்கேயும் செட்டாகாததால் சில நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அந்த ஷோவிற்குப் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் வெள்ளித்திரை மட்டுமில்லாமல், சின்னத்திரை சீரியல்களிலாவது வாய்ப்பு கிடைக்குமா என்று நீண்ட நாட்களாக அலைந்து திரிந்தார். ஆனால், அங்கேயும் அவருக்குப் கதவுகள் மூடப்பட்டன.

சப்ஸ்கிரிப்ஷன்: சினிமா, சீரியல் என எதிலுமே வாய்ப்பு கிடைக்காததால், பிழைப்புக்காக வேறு வழியே இல்லாமல் தற்போதைய சோசியல் மீடியா ட்ரெண்டைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார் அந்த நடிகை. பல வட இந்திய நடிகைகள் செய்வது போல, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கட்டணச் சந்தாவை ஆரம்பித்துள்ளார். மாதா மாதம் பணம் கட்டித் தன்னைத் தொடரும் பிரத்யேக சப்ஸ்கிரைபர்களுக்காக, வாராவாரம் படுகவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி, அந்தப் புகைப் படங்களை அதில் பதிவிட்டுத் தனது சப்ஸ்கிரைபர்களைக் குஷிப்படுத்தி வருகிறார். இதன் மூலம் தற்போதைய சூழலில் வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கான பணத்தை அந்த நடிகை சம்பாதித்து வருகிறார்.
டேமேஜ் ஆகும் இமேஜ்: பணம் கட்டிப் பார்க்கும் அந்தப் பிரத்யேகப் பக்கத்தில் இருந்து, ஒன்று இரண்டு படுகவர்ச்சிப் புகைப்படங்கள் அவ்வப்போது ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டு இணையத்தில் கசிந்து விடுகின்றன. இது பொதுவெளியில் அவரது இமேஜை டோட்டலாக டேமேஜ் ஆக்கி, நெட்டிசன்களின் கடுமையான விவாதத்திற்கும் ட்ரோல்களுக்கும் உள்ளாகிறது. இதைப் பற்றியெல்லாம் அந்த நடிகை துளியும் கவலைப்படவில்லை. வாய்ப்பு தராத சினிமா உலகம் என்ன சொன்னால் நமக்கென்ன? கை நிறையப் பணம் வந்தால் போதும் என்ற எண்ணத்தோடு, நாளுக்கு நாள் வரம்பு மீறிய படங்களைப் பதிவிட்டுத் தனது கல்லாவைக் கட்டி வருகிறார் அந்தத் துணிச்சலான நடிகை.


Click it and Unblock the Notifications