இந்த நேரத்துல இப்படி ஒரு ரிஸ்க் தேவையா.. ரீஎண்ட்ரியான ஒல்லி பெல்லி நடிகை மீது கோபத்தில் ரசிகர்கள்!

ஒல்லி நடிகையின் முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை: தமிழில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி இருக்கும் நடிகையின் அதிரடி முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு காலத்தில் தமிழின் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் ஒல்லி பெல்லி நடிகை. நடிப்புடன், நடனத்திலும் அம்மணி கலக்கியவர்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தவர், தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

அதிரடி முடிவு:

அதிரடி முடிவு:

சூப்பர் படம் உட்பட கைவசம் மூன்று படங்கள் வைத்திருக்கிறார் நடிகை. மேலும் பல படவாய்ப்புகள் கைகூடும் நிலை காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் நடிகை அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார்.

பேட்டி:

பேட்டி:

அதாவது தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என முடிவு செய்துள்ள நடிகை, ஆங்கில நாளிதழுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். கூடவே, கவர்ச்சி வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் அவர் பேட்டியளித்துள்ளார்.

ரசிகர்கள் கோபம்:

ரசிகர்கள் கோபம்:

இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது ஏன் இப்படி அவசரப்படுகிறார் என நடிகை மீது அவர்கள் கோபத்தில் உள்ளனர்.

தேவையில்லாத வேலை:

தேவையில்லாத வேலை:

எப்படியும் சூப்பர் படம் உட்பட அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி பெரும் வெற்றி பெரும் சூழல் உள்ளது. அவரும் முட்டைக் கண்ணழகி நடிகை போல் திருமணத்திற்குப் பிறகும் தமிழில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து, ஒரு ரவுண்டு வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தன் பெயரை தானே கெடுத்துக் கொள்கிறாரே என்கின்றனர் அவரது நலவிரும்பிகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X