பிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்
பிகினி உடையில் நடிக்க தயாராக இருக்கும் நண்பன் நடிகை, சம்பள விஷயத்தில் கறாராக இருக்கிறாராம்.
Recommended Video

சென்னை: புதிய படவாய்ப்புகளைத் தேடி வரும் பிரண்டு நடிகை, பிகினி போட்டு நடிப்பதென்றாலும் ஓகே ஆனால், சம்பளம் மட்டும் பாலிவுட் படங்களுக்கு தருவது போல் வேண்டும் எனக் கேட்கிறாராம்.
தமிழில் விரல் விட்டு எண்ணி விடும் அளவிற்கு மட்டுமே படங்களில் நடித்தவர் பிரண்டு நடிகை. தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி படங்கள் அமையாததால், தனது கவனத்தை தெலுங்கு பக்கம் தன் கவனத்தை திருப்பினார். அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அடுத்ததாக பாலிவுட்டுக்கு பறந்தார்.
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டக் கதையாக, பாலிவுட்டில் எதிர்பார்த்த அளவு படங்கள் கிடைக்கவில்லை. மீண்டும் தெலுங்கிற்கு திரும்பலாம் என்றால் அங்கும் வாய்ப்புகள் இல்லை.

வாய்ப்புகளைத் தேடி:
இதனால், காதலருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவதை பொழுதுபோக்காகக் கொண்டுள்ள நடிகை, இடையிடையே தமிழிலும் புதிய படவாய்ப்புகளைத் தேடி வருகிறாராம். இதற்காக முன்னணி இயக்குனர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.

சம்பளம் பிரச்சினை:
‘தமிழில் நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிக கவர்ச்சிக்குத் தயார். பிகினி என்றாலும் ஓகே' எனக் கூறும் நடிகை, அதற்கு கைம்மாறாக பாலிவுட்டில் தருவது போல் கை நிறைய சம்பளம் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கிறாராம்.

யோசனை :
இந்தியில் அவருக்கு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால், தமிழில் நாயகிகளுக்கு அந்தத் தொகை மிகப் பெரிய விசயம். எனவே, பிரண்டு நடிகையை எப்போதும் பரிசீலனையிலேயே வைத்துள்ளார்களாம் தயாரிப்பாளர்கள்.

பிரகாசமான வாய்ப்பு :
சம்பள விசயத்தில் நடிகை கொஞ்சம் இறங்கி வந்தால், தமிழில் ஒரு ரவுண்டு வருவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர் அவரது நலம் விரும்பிகள். இறங்கி வருவாரா நடிகை.


Click it and Unblock the Notifications











