ரெண்டு ஒல்லியையும் சேர்த்து வைக்க முயற்சிக்கும் நட்பு வட்டாரம்!
ஒல்லி நடிகர், ஒல்லி இசையமைப்பாளர் இருவரையும் சேர்த்து வைக்க அவர்கள் இருவருக்குமான பொது நண்பர்கள் முயற்சி செய்து வருகிறார்களாம்.
ஒல்லி இசையை மிக இளம் வயதிலேயே அறிமுகம் செய்தது ஒல்லி நடிகர் தான். ஆனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். ஒல்லியை விட்டு வேறு ஒரு இசையமைப்பாளருடன் கூட்டு வைத்தார் நடிகர். செட் ஆகவில்லை. இப்போது நடிக்கவிருக்கும் இரண்டாம் பாக படத்துக்கு வாரிசு இசையை புக் செய்திருக்கிறார். ஒல்லி இசை இல்லாமல் அவர் தவிப்பது தெரிகிறது.

இதேபோல் ஒல்லி இசையும் ஹிட் கொடுக்க முடியாமல் தவிக்கிறார். தல நடிகரே தனது அடுத்த படத்துக்கு அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இருவரையும் இணைத்தால் அது பெரிய வெற்றியாக அமையுமே என்று பொதுவான நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். இசைக்கு ஓகே தான். நடிகர்தான் யோசிக்கிறாராம். என்ன இருந்தாலும் அறிமுகப்படுத்தியவர் ஆச்சே... இருக்கத்தான் செய்யும்!


Click it and Unblock the Notifications











