»   »  கீதுவுக்கு ஆச்சா?

கீதுவுக்கு ஆச்சா?

Subscribe to Oneindia Tamil

நள தமயந்தி ஹீரோயின் கீது மோகன்தாஸுக்கும், கேரளாவைச் சேர்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் ஒருவருக்கும்இடையே ரகசியக் கல்யாணம் ஆகி விட்டதாக சூடான கிசுகிசு எழுந்துள்ளது.

பூ விழி வாசலிலே படத்தில் குட்டிப் பாப்பாவாக நடித்தவர் கீது. வளர்ந்து, தள தள பாப்பாவாக மாறிய பின்னர்ஹீரோயினாக மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அவரை கமல் தனது நள தமயந்தி படத்தில் நாயகியாக்கினார். முத்திப் போன முகமாக இருந்ததால் இங்குள்ளஇளவயசுப் பசங்கள், கீதுவுடன் ஜோடி போட விரும்பவில்லை. இதனால் ஒரு வாய்ப்பும் வராமல் மீண்டும்மலையாளத்துக்கேத் திரும்பினார்.

சின்ன வயசில் தனது நடிப்பால் மிரட்டிய கீது, ஹீரோயின் ஆனதும் தனது கவர்ச்சியால் கதகதப்பைஏற்படுத்தினார். மலையாளத்தில் அவர் கிளாமர் காட்டி நடிக்கத் தயங்கவில்லை. ஆனால் தமிழில் நாயகி வேடம்தவிர்த்து தன்னைத் தேடி வந்த கிளாமர் ரோல்களை நிராகரித்து விட்டார்.

இந்த நிலையில் கே.பாலச்சந்தரின் பொய் படத்தில் அவருக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டது. ஆனால்,பொய் தோல்வியைத் தழுவிய நிலையில் புதிதாக அவரைத் தேடி ஒரு படமும் வரவில்லையாம்.

இந் நிலையில் கீது, கேரள ஒளிப்பதிவாளர் ஒருவரை ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக சூடான கிசுகிசுகிளம்பியுள்ளது. இந்த செய்தியை கீது தரப்பு உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இதனால் கீதுவுக்கு கல்யாணம் ஆச்சா, இல்லையா என்பது மர்மமாக உள்ளது.

Read more about: geethu mohandas married
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil