உன்னை இதுக்குமேல நம்பினா நடுத்தெருவுதான்.. பிரபல இயக்குநருக்கு கும்பிடு போட்ட தயாரிப்பு நிறுவனம்?
சென்னை: குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்களை எடுத்து ஹிட் கொடுப்பதை விட்டு விட்டு பெரிய பட்ஜெட்டில் பில்டப் படங்களை எடுத்து ஓவர் நைட்டில் தனது சிஷ்யனையே மிஞ்சி விட வேண்டும் என்கிற வியாதியில் சமீப காலமாக அந்த பிரமாண்ட இயக்குநர் சுற்றிக் கொண்டும் சொதப்பிக் கொண்டும் இருக்கிறார். அவரது பேராசைக்கு அந்த பாவப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தான் ஊறுகாயாக மாறிவிட்டது என்பது தான் காலக்கொடுமை.
பேராசைப் பட்டு பெரிய நஷ்டத்துடன் தயாரிப்பாளருக்கும் தனக்கும் சேர்த்து பெரிய போர்வையாக வாங்கி போர்த்திக் கொண்டு திரிகிறார் என கடுமையான கேலி கிண்டல்கள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், மீண்டும் அந்த இயக்குநரை நம்பி ஒரு ரூபாய் கூட போட மாட்டேன் என்கிற முடிவுக்கு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டதாம்.

சிறிய பட்ஜெட்டில் நல்ல நல்ல படங்கள் வெளியாகி பெரிய வெற்றிகளை இந்த ஆண்டு குவித்து வரும் நிலையில், கொக்கு போல ஒற்றைக் காலில் நின்றுக் கொண்டு அடம்பிடிக்கும் அந்த பிரமாண்டத்துக்கு அவர் நினைத்தது போல அந்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் இருப்பதால் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறதாம்.
எல்லாமே அவுட்டேட்டட்: ஃப்யூரிஸ்டிக் படங்களை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தவரே அந்த இயக்குநர் தான். ஆனால், தற்போது பழங்கால படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு எல்லாம் மவுசு இருக்கிறது. ஆனால், இவரை அவுட்டேட்டட் என சினிமா உலகம் ரிட்டயராக சொல்லிக் கொண்டிருக்கிறது. மீண்டும் அந்த பாஸ் நடிகருடன் பிரமாண்டம் இணையும் போது இருந்த எதிர்பார்ப்பு எல்லாம் படம் வெளியானதும் சுக்குநூறாக உடைந்து விட்டது.
ஒரு பைசா கூட போடமுடியாது: எப்படியாவது அந்த விட்டக் குறை தொட்டக் குறையை எடுத்து வெளியிட்டாலாவது தனது அடுத்த ராஜா படத்துக்கு ஏமாந்த நிறுவனம் ஏதாவது சிக்கும் என இயக்குநர் அளந்துவிட்டக் கதை எதையுமே நம்ப முடியாது என்றும் இனிமேல் போடுவதற்கு ஒரு பைசா கூட எங்களிடம் இல்லை. பெரிய நடிகர்களையும் இயக்குநர்களையும் நம்பி படமெடுத்தால் மினிமம் கியாரண்டி என நம்பிய எங்களுக்கு நல்ல கதைகள் மட்டுமே லாபத்தைக் கொடுக்கும் என்பதை சூடு போட்டது போல உணர்த்திட்டீங்க என கும்பிடு போட்டு விட்டதாம் அந்த நிறுவனம்.


Click it and Unblock the Notifications











