ஜி நடிகரை குடிக்கு அடிமையாக்கிய கவர்ச்சி நடிகை.. உள்ளே புகுந்து ஆட்டத்தை களைத்த தயாரிப்பாளர்!

By Staff

சென்னை: கவர்ச்சி நடிகையாக சினிமாவில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அந்த நடிகை தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். அதன் பிறகு தான் நகைச்சுவை நடிகர் ஒருவரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் நடித்த அந்த கவர்ச்சி நடிகைக்கு தமிழில் பட வாய்ப்பு குறைந்ததை அடுத்த தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஒரு நடிகரின் உதவியுடன் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கேயும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை அவருக்கு வந்ததால் அதிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களே இவருக்கு வந்தன.

பின் அங்கேயும் வாய்ப்புகள் குறைந்துவிட, ஒரு சில சீரியல்களில் தலை காட்டினார். சீரியல்களின் படப்பிடிப்பு காலையிலிருந்து இரவு வரை நடக்கும் இதனால், ஓய்வே இருக்காது. இதனால், அவரால் தாக்குப் பிடிக்க முடியாமல், சீரியலை விட்டு விலகி மலேசியாவிற்கு சென்று செட்டிலானார். பல ஆண்டுகள் கழித்து இப்போது தான், அந்த கவர்ச்சி நடிகையின் பெயர் அடிபட்டு வருகிறது. இந்த நடிகை பல ஆண்டுக்கு முன்பே ஒரு படத்தை தயாரித்தார். அப்போது தான் பிரபல தயாரிப்பாளர் ஒருவர், உனக்கு படம் தயாரிப்பதில் முன் அனுபவம் இல்லை என்று, அந்த கவர்ச்சி நடிகைக்கு உதவி செய்வதாக சொல்லி உள்ளே வருகிறார். ஆனால், அந்த படமும் தோல்வி அடைந்தது. அதில், அந்த கவர்ச்சி நடிகையின் படம் மொத்தமும் போச்சு.

Gossip kisu kisu

ஆட்டத்தைகளைத்த தயாரிப்பாளர்: இந்த நேரத்தில் தான் அந்த கவர்ச்சி நடிகைக்கு நட்பு வட்டாரம் பெரியதாக, சனிக்கிழமை ஆனால், பார்ட்டி கூத்து என்று நண்பர்களுடன் இருப்பதை வழக்கமாக வைத்து இருந்தார். அப்போது, தான் அந்த கவர்ச்சி நடிகையை 'ஜி' எழுத்து தமாஷ் நடிகர் உயிருக்கு உயிராக காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கே பிளான் போட்ட நிலையில், அப்போது, இவர்கள் இருவருக்கும் உள்ளே புகுந்த தயாரிப்பாளர் ஒருவர், ஆட்டத்தை களைத்துவிட்டார். இதனால், அந்த கவர்ச்சி நடிகையின் காதல் தோல்வி அடைந்தது. அந்த காதல் மட்டும் கைகூடி இருந்தால், கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை நன்றாக இருந்து இருக்கும். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது.

தமாஷ் நடிகரை பிரிந்த பின், மன அழுத்தத்தில் இருந்த அந்த நடிகை வீட்டை விட்டு வெளியே வராமல், போதைக்கு அடியாகி விட்டார். கவர்ச்சி நடிகை மட்டுமில்லாமல், அந்த தமாஷ் நடிகரும் மன விரக்தியில் அதிகமாக குடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த நேரத்தில் தான், சினிமாவிற்கு கொஞ்சமும் சம்மந்தமே இல்லாத ஒருவருடன் நட்பு ஏற்படுகிறது. அவருடன் அந்த கவர்ச்சி நடிகை நெருங்கி பழகி, இவர் தான் இனி வாழ்க்கை என நினைத்த போது, அந்த நபரும் ஏமாற்றிவிட, மிகவும் மன அழுத்தத்தில் இருந்த அந்த நடிகை தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X