For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விபத்தால் வந்த வினை.. கவர்ச்சி நடிகைக்கு கைக்கு எட்டியதெல்லாம் இப்போ கை நழுவி போகிறதாம்!

  By Staff
  |

  சென்னை: இனி அவர் சரிபட்டு வரமாட்டார். வேறு ஹீரோயினை போட்டு படத்தை ஆரம்பிக்க வேண்டியது தான் என தயாரிப்பாளர்கள் இயக்குநர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

  கவர்ச்சியாக நடித்து வந்த அந்த நடிகை தனது உடல் எடையை எல்லாம் குறைத்து ஹீரோயினாக களமிறங்கிய நிலையில், அவருக்கு ஏகப்பட்ட புதிய பட வாய்ப்புகள் குவிந்தன.

  ஆனால், எதிர்பாராதவிதமாக நடந்த அந்த விபத்து காரணமாக தற்போது நிலைமையே தலைகீழாக மாறி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

  திருமணத்தை நிறுத்தியது இதற்காகதானா? தனுஷ் பட நடிகை ஷேர் செய்த போட்டோ.. ஜெர்க்கான நெட்டிசன்ஸ்! திருமணத்தை நிறுத்தியது இதற்காகதானா? தனுஷ் பட நடிகை ஷேர் செய்த போட்டோ.. ஜெர்க்கான நெட்டிசன்ஸ்!

  மாடலிங்கில் ஆர்வம்

  மாடலிங்கில் ஆர்வம்

  இளம் வயதிலேயே மாடலிங்கில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஏகப்பட்ட ஃபேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தி வந்த அந்த இளம் மாடலுக்கு சில சினிமா வாய்ப்புகள் வந்து குவிந்தன. சின்ன ரோலாக இருந்தாலும், கவர்ச்சி கதாபாத்திரமாக இருந்தாலும் உடனே ஓகே சொல்லி சினிமா பக்கம் காலடி எடுத்து வைத்தார்.

  கசமுசா படம்

  கசமுசா படம்

  ஆபாச படம் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்ட அந்த கசமுசா படத்தில் நல்லா கும்முன்னு நடித்து ஆபாச வசனங்களை எல்லாம் பேசி வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அந்த இளம் கவர்ச்சி நடிகை. தொடர்ந்து அவருக்கு அதே மாதிரியான கதாபாத்திரங்கள் கதவைத் தட்ட ஆரம்பித்தன.

  அந்த வீட்டுக்குள்

  அந்த வீட்டுக்குள்

  என்ன இப்படி வைரலாகி வருகிறாரே.. நம்ம வீட்டுக்குள் சில நாட்கள் அவரை அழைத்து வந்து அடைத்து வைத்தால் டிஆர்பி எகிறுமே என திட்டம் போட்டு அந்த வீட்டுக்குள் அவரை போட்டியாளராக அனுப்ப அவரும் குட்டி உடைகளை அணிந்து கொண்டு குதித்து ஓடி விளையாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

  இன்ஸ்டாகிராமில் வைரல்

  இன்ஸ்டாகிராமில் வைரல்

  அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலும், ரசிகர்கள் சேரவே, தொடர்ந்து போட்டோஷூட்களாக நடத்தி கவர்ச்சி பொங்க பல்வேறு கிளாமர் போட்டோக்களை அடுக்கி ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வைரலாகி வந்தார் அந்த இளம் நடிகை.

  விருது வேற

  விருது வேற

  அவர் நடித்த எந்த படமும் ஓடாத நிலையில், அந்த நடிகைக்கு சிறந்த நடிகைக்காக விருதையும் ஒரு நிறுவனம் வழங்கியது நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் மெட்டீரியல் ஆனது. இவரே காசு கொடுத்து சில பிரபலங்கள் போல அப்படியொரு விருதை வாங்கிக் கொண்டார் என்றும் கலாய்த்துத் தள்ளினர்.

  கைக்கு வந்த வாய்ப்புகள்

  கைக்கு வந்த வாய்ப்புகள்

  தொடர்ந்து எல்லை மீறிய கவர்ச்சி போட்டோக்களை போட்டு வந்த அந்த கவர்ச்சி நடிகை திடீரென தனது உடல் எடையை குறைத்து ஸ்லீக் அண்ட் ஸ்லிம்மாக மாற ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடிக்க வாங்கன்னு சுக்கிர திசை அடிக்க ஆரம்பித்தது. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை நல்லா போய்க் கொண்டிருந்த அந்த வண்டி திடீரென விபத்தில் சிக்கி எல்லாமே தலை கீழாய் மாறியது.

  பார்ட்டியால் வந்த வினை

  பார்ட்டியால் வந்த வினை

  வீக்கெண்ட் ஆனால் வண்டியை எடுத்துக் கொண்டு பார்ட்டிக்கு கிளம்பி விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்த அந்த கவர்ச்சி நடிகைக்கு திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக வாழ்க்கையே டோட்டலாக மாறிவிட்டது. கொஞ்சம் விட்டு இருந்தால் உயிரே போயிருக்கும் நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தாலும் உடல் முழுக்க சேதாரம் ஆகி விட்டது.

  ரொம்ப நாளாகும்

  ரொம்ப நாளாகும்

  பழையபடி குணமாகி மீண்டும் படப்பிடிப்புகளில் அந்த நடிகை கலந்து கொள்ள ரொம்ப நாளாகும் என்கிற தகவலை அறிந்த தயாரிப்பாளர்கள் அவரை நம்பி படம் எடுக்க ஆரம்பித்தோமே இப்போ என்ன செய்வது என கொஞ்சம் கொஞ்சமாக புலம்ப ஆரம்பித்துள்ளார்களாம்.

  ஆளை மாத்தணும்

  ஆளை மாத்தணும்

  மற்ற படங்களின் படப்பிடிப்புகள் மின்னல் வேகத்தில் கொரோனாவையும் கண்டு கொள்ளாமல் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் நாம் மட்டும் இந்த நடிகை குணமாகி வரும் வரை காத்திருக்க வேண்டுமா? என்கிற கேள்வியை இயக்குநர்களிடம் எழுப்பி வருகிறார்களாம் சில தயாரிப்பாளர்கள். மேலும், வேற நடிகைகளை போட்டு படப்பிடிப்பை ஆரம்பிக்கவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

  பெரிய சிக்கல்

  பெரிய சிக்கல்

  ஆனால், அந்த கவர்ச்சி நடிகையை வைத்து பாதி படத்திற்கும் மேல் எடுத்து விட்ட சில தயாரிப்பாளர்களுக்குத் தான் இதில் பெரிய சிக்கலே உருவாகி இருக்காம். ஒரு ஷெட்யூல் முடித்த தயாரிப்பாளர்கள் எல்லாம் போனது போகட்டும் வேற யாரு டிரெண்டிங்கில் இருக்காரோ அவரை போட்டு படம் பண்ணலாம் என நகர்ந்து விட, பாதி கிணற்றை தாண்டியவர்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு என்ன முடிவு செய்வதென்றே தெரியாமல் இயக்குநர்களை கடிந்து வருவதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

  எல்லாம் போச்சு

  எல்லாம் போச்சு

  வளர்ந்து வரும் அந்த நடிகைக்கு இப்போது தான் புது வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. ஆனால், எதிர்பாராத விதமாக நடைபெற்ற அந்த விபத்து காரணமாக எல்லாமே கையை விட்டு போன நிலை உருவாகி விட்டதை எண்ணி இந்த நிலையிலும் நடிகை ரொம்பவே ஃபீல் பண்ணி வருகிறாராம்.

  குற்ற உணர்ச்சி

  குற்ற உணர்ச்சி

  அதுமட்டுமின்றி தன்னுடைய அலட்சியத்தால் தான் தனது தோழிக்கு அப்படி நேர்ந்து விட்டது என்கிற குற்ற உணர்ச்சியும் அந்த நடிகையை ரொம்பவே பாதித்து வருகிறதாம். நடிகையின் பெற்றோர் நீ நல்லா இருந்தாலே போதும், இந்த துறையே வேண்டாம் விட்டு விலகி விடு என்றும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

  English summary
  Glamorous actress loses movie chances due to that horrible accident. Producers and directors wish to move to other actress for her role.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X