அடிபட்டும் திருந்தல.. மீண்டும் இரவு நேர பார்ட்டிகளில் அந்த கிளாமர் நடிகை கலந்துக்குறாராம்!

By Staff

சென்னை: ஏற்கனவே பப், பார்ட்டி என சென்றதால் தான் அப்படியொரு ஆபத்தான விஷயமே ஏற்பட்டது. கொஞ்ச காலமாக அதிலிருந்து விலகியிருந்த நடிகை மீண்டும் இரவு நேர பார்ட்டிகளில் பங்கேற்று வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனது அழகான வளமான கவர்ச்சியால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்திழுத்து உள்ளார் அந்த கிளாமர் நடிகை.

சமூக வலைதளங்களில் படு தாராளமாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

கண் கூசும் கிளாமர்

கண் கூசும் கிளாமர்

ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு முன்னழகை காட்டி கவர்ச்சியில் தெறிக்கவிட்டு வெகு விரைவில் கோலிவுட் ரசிகர்களின் திடீர் கனவுக் கன்னியாக மாறியவர் அந்த இளம் கிளாமர் நடிகை. நடிப்பு கொஞ்சம் கூட வரவில்லை என்றாலும், கவர்ச்சியில் ஸ்கோர் செய்வதால் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் நடிகைக்கு ஆரம்பத்தில் அதற்காகவே குவிந்தன.

பார்ட்டிகளில் பட வாய்ப்பு

பார்ட்டிகளில் பட வாய்ப்பு

இளம் நடிகைகளுக்கு இரவு நேர பார்ட்டிகளில் தான் புதிய பட வாய்ப்புகளே கிடைத்து வருவதாக கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த நடிகையும் பல பார்ட்டிகளில் கலந்து கொண்டதன் காரணமாகத்தான் இவருக்கும் நடிக்க வாய்புகள் கிடைத்து வந்தன. ஆனால், ஒரு பார்ட்டிக்கு சென்று விட்டு திரும்பும் போது எதிர்பாராதவிதமாக அப்படியொரு விபத்து ஏற்பட்டது.

நடிகையால் மறக்க முடியாது

நடிகையால் மறக்க முடியாது

அன்று இரவு நடந்த சம்பவத்தை நடிகையால் என்றைக்குமே மறக்க முடியாது. அப்படியொரு இழப்பை அவர் சந்தித்து இருந்தார். அதில் ஏற்பட்ட அடி காரணமாக பல மாதங்கள் எந்தவொரு வேலையையும் செய்ய முடியமல் ஸ்தம்பித்து போயிருந்த அந்த கிளாமர் நடிகை மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்.

அடிபட்டும் திருந்தல

அடிபட்டும் திருந்தல

ஆனால், அப்படி அடிபட்டும் சில காலம் பார்ட்டிகளுக்கு போகாமல் இருந்து வந்த அந்த நடிகை மீண்டும் இரவு நேர பார்ட்டிகளுக்கு தனது நண்பர்களுடன் செல்ல ஆரம்பித்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. புதிதாக படங்கள் ஏதும் கிடைக்காத நிலையில், மீண்டும் பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளாராம் நடிகை.

அந்த பயம் இருக்கு

அந்த பயம் இருக்கு

ஆனால், முன்பை போல முழு குடி போதையில் தாறுமாறாக வாகனத்தை செலுத்த மாட்டேன் என்கிற முடிவில் மட்டும் முழு கவனத்துடன் இருக்கிறாராம். தனது நண்பர்களை கூட நம்பாமல், பார்ட்டிக்கு வராத, குடி பழக்கம் இல்லாத கார் டிரைவர் ஒருவரை எப்போதுமே கூட அழைத்துச் செல்கிறார் அந்த நடிகை எனவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X