ஏகபோகமாக பீச் ஹவுஸ் பார்ட்டி வைக்கும் நடிகை.. அட்டனஸ் போடும் இளம் நடிகர்கள் டூ அரசியல் வாரிசுகள் வரை
சென்னை: சினிமாவில் ஒரு சில நடிகைகள் பட வாய்ப்புகள் குறைந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் சரி, சொகுசு வட்டாரங்களிலும் சரி, எப்போதும் டாப் கியரிலேயே வலம் வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு கிளாமர் நடிகைதான் இப்போது கோலிவுட்டின் "பார்ட்டி குயின்" ஆக உருவெடுத்துள்ளார். சென்னை கடற்கரை சாலையில் இருக்கும் இவரது சொகுசு பங்களாதான் இப்போது வார இறுதி நாட்களில் விவிஐபிக்களின் சொர்க்கபுரியாக மாறியிருக்கிறதாம்.
சினிமா ஷூட்டிங், டப்பிங் என எதற்கும் போகாத இந்த நடிகை, வாரத்தில் மூன்று நாட்களாவது ஏகபோகமாக இந்த பீச் ஹவுஸ் பார்ட்டியை அரங்கேற்றி விடுகிறார். விடிய விடிய நடக்கும் இந்த ஆட்டத்திற்குள் நுழைய சாதாரண ஆட்களுக்கு அனுமதியே கிடையாது.
இளம் நடிகர்களின் அட்டனஸ்: இந்த நடிகையின் பார்ட்டி என்றாலே கோலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள், வாரிசு நடிகர்கள் பலரும் முதல் ஆளாக அங்கே ஆஜராகி விடுகிறார்கள். "அவங்க கூப்பிட்டா போகாம இருக்க முடியுமா?" என்கிற ரேஞ்சில், நடிகையின் ஒரு போன் காலில் முன்னணி இளம் ஹீரோக்கள் பலரும் தங்களது கார்களை நடிகையின் பீச் ஹவுஸ் நோக்கி திருப்புகிறார்கள்.
மது, மங்கை, மியூசிக் என எல்லாமே டாப் கிளாஸாக ஏற்பாடு செய்யப்படுவதால், இளம் நடிகர்கள் பலரும் தங்களது ஸ்ட்ரெஸ்ஸை ரிலீஃப் செய்ய இந்த இடத்தை ஒரு புகலிடமாக மாற்றி வைத்துள்ளனர்.

அரசியல் வாரிசுகளின் எண்ட்ரி.. பின்னணி என்ன?: சினிமா பிரபலங்கள் ஒருபுறம் என்றால், இந்த பார்ட்டிகளின் ஹைலைட்டே தமிழகத்தின் முக்கிய அரசியல் வாரிசுகளின் வரவுதான். பண பலமும், அதிகார பலமும் கொண்ட அரசியல் வாரிசுகள் பலரும் இந்த நடிகையின் பீச் ஹவுஸ் பார்ட்டிக்கு ரகசியமாக வந்து அட்டனஸ் போடுகிறார்கள்.
"சினிமாக்காரங்க மட்டும் இருந்தா அது வெறும் பார்ட்டி.. அரசியல் வாரிசுகள் வந்தாதான் அது பவர்ஃபுல் நெட்வொர்க்" என்பதுதான் அந்த நடிகையின் கணக்காம். அரசியல் வாரிசுகளுடன் ஏற்படும் இந்த நெருக்கத்தை வைத்து, நடிகை தனது அடுத்த கட்ட பிசினஸ் டீல்களையும், ரியல் எஸ்டேட் முதலீடுகளையும் கச்சிதமாக முடித்துக் கொள்கிறாராம்.
புலம்பும் குடும்பங்கள்: இந்த பார்ட்டி கலாச்சாரத்தால் கோலிவுட்டில் சில குடும்பங்களில் புயல் வீசத் தொடங்கியுள்ளது. பார்ட்டிக்குச் செல்லும் இளம் நடிகர்கள், நடிகையின் வலையில் விழுந்து தங்களது சம்பளப் பணத்தை அங்கே வாரி இறைப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. சில நடிகர்களின் வீடுகளில் "ஏன் வார வாரம் அங்க போறீங்க?" என்று சண்டையே நடக்கிறதாம்.
இருந்தாலும், நடிகையின் அந்த காந்தப் புன்னகைக்கும் உபசரிப்புக்கும் மயங்கி, "அடுத்த வாரம் எப்போ பார்ட்டி?" என்று இளம் ஹீரோக்களும் அரசியல் வாரிசுகளும் தவம் கிடக்கிறார்கள். மொத்தத்தில், சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும், இந்த பீச் ஹவுஸ் நெட்வொர்க்கை வைத்து ஒட்டுமொத்த விவிஐபிக்களையும் தனது கைக்குள் வைத்திருக்கிறார் அந்த ஏகபோக நடிகை!


Click it and Unblock the Notifications