For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அந்த வீட்டுக்கு போனால் தான் வளர முடியும்.. எல்லை மீறி கவர்ச்சி காட்டியும் எடுபடாததால் நடிகை முடிவு!

  By Staff
  |

  சென்னை: சமூக வலைதளங்களில் மற்ற இளம் நடிகைகள் காட்டும் கவர்ச்சியை விட அதிக அளவில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியும் இதுவரை ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பதால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம் அந்த மலையாள மங்கை.

  இந்நிலையில், அவருக்கு மிகவும் நெருங்கிய தோழி ஒருவர் அவருக்கு சூப்பர் ஜோஷியம் ஒன்றை சொல்லி இருக்கிறார்.

  நடிகர் கதிர் நடிக்கும் த்ரில்லர் படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! நடிகர் கதிர் நடிக்கும் த்ரில்லர் படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

  அது என்ன வென்றால் அந்த ஒரு வீட்டுக்கு போயிட்டு வந்தால் உன் வாழ்க்கையே மாறும் என அட்வைஸ் செய்துள்ளாராம்.

  ஆரம்பமே அசத்தல்

  ஆரம்பமே அசத்தல்

  மலையாள மங்கைகளுக்கு எப்போதுமே கோலிவுட்டில் தனிக் கொடி, சின்ன, ஏன் விட்டா கோயில் கூட கட்டும் அளவுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு இருக்கும். மலையாள இயக்குநர் டாப் நடிகரை வைத்து இயக்கிய படத்தில் ஆரம்பமே அசத்தலாக என்ட்ரி கிடைத்தும் அடுத்தடுத்து பெரிய அளவில் அந்த இளம் நடிகையால் வளர முடியாமல் போய் விட்டது.

  போட்டோ ரூட்

  போட்டோ ரூட்

  மாடி போட்டோஷூட் நடத்தியே கோலிவுட்டில் மார்க்கெட்டை உச்சத்துக்கு ஏகப்பட்ட இளம் நடிகைகள் கொண்டு சென்று வரும் நிலையில், அதே வழியை தானும் பின்பற்றலாம் என நினைத்த அவர் அந்த ரூட்டிற்கு சென்று இதுவரை முட்டி மோதி பார்த்தும் ஒரு பலனும் கிடைக்கவில்லை.

  சின்ன சின்ன ரோல்

  சின்ன சின்ன ரோல்

  பெரிதாக எந்தவொரு வாய்ப்பும் அந்த நடிகைக்கு இதுவரை கிடைக்கவே இல்லை. அப்படியே சில படங்கள் கமீட் ஆனாலும், சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்து வருகிறதாம். துணை நடிகை ரேஞ்சுக்கே தன்னை தொடர்ந்து பலரும் யூஸ் பண்ணி வருவதாக சில இயக்குநர்களிடம் மனம் குமுறியே கூறி விட்டாராம்.

  டாப்லெஸ் வரை

  டாப்லெஸ் வரை

  கவர்ச்சியின் எல்லைக்கு சென்று போட்டோக்களை போட்டால் ஆட்டோமேடிக்கா வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டும் என சில போட்டோ கலைஞர் அவர்கள் பிழைப்பு நடத்துவதற்காக சொன்ன வார்த்தைகளை நம்பி டாப்லெஸ் போட்டோஷூட் வரை நடத்தி முடித்து விட்டாராம். ஆனால், கோடம்பாக்கத்தில் இருந்து ஒரு போன் கால் கூட அவருக்கு வரவில்லையாம்.

  தோழி அட்வைஸ்

  தோழி அட்வைஸ்

  அவரை போலவே சினிமாவில் ஆரம்ப நிலையில் இருக்கும் இன்னொரு நடிகை அவருக்கு தற்போது சூப்பர் அட்வைஸ் கூறியிருக்கிறாராம். ஆரம்பத்தில் இதே கஷ்டத்தை நானும் அனுபவித்தேன். ஆனால், அந்த வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய பின்னர் என் லெவலே மாறிடுச்சு ஏகப்பட்ட வாய்ப்புகள் சும்மா வந்து குவியுது. நீயும் ஒரு முறை ட்ரை பண்ணி பாரு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், அதன் பிறகு வரும் வாய்ப்புகளையும் வருமானத்தையும் நினைத்து பார்த்தால் நான் சொன்னது தான் சரி என உனக்கே அப்போது தோன்றும் என எக்கச்சக்க பிட்டுகளை போட்டு இருக்கிறார்.

  நான் வரல

  நான் வரல

  ஏற்கனவே அந்த ரியாலிட்டி ஷோவுக்கு மலையாள மங்கை அழைக்கப்பட்ட நிலையில், அய்யோ எனக்கு பிரைவசி ரொம்ப முக்கியம்பா.. நான்லாம் உள்ளே வரல என வழிய வந்த அழைப்பை வேண்டாம் என நிராகரித்து விட்டாராம். அதனால், தற்போது மீண்டும் எப்படி எந்த முகத்தை வைத்துக் கொண்டு கேட்பது என்கிற தயக்கத்தில் இருக்கிறேன் என தோழியிடம் புலம்பி உள்ளார்.

  நான் பார்த்துக்கிறேன்

  நான் பார்த்துக்கிறேன்

  அதெல்லாம் ஒண்ணும் கவலைப் படாதே.. அவங்களுக்கே ஆள் கிடைக்கலையேன்னு தான் ஒவ்வொருத்தருக்கா அழைப்பு விடுத்துட்டு இருக்காங்க.. உன்னை இந்த முறை உள்ளே அனுப்புவது என் பொறுப்பு அதை நான் பார்த்துக்கிறேன் என ஏதோ அந்த ரியாலிட்டி ஷோவையே இவரே நடத்துவது போல வாக்கு கொடுத்திருக்கிறார்.

  நடிகை ரெடி

  நடிகை ரெடி

  உள்ளே எப்படி இருக்கும் என்றும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஏகப்பட்ட ப்ளுப்ரின்ட் விஷயங்களை தோழியிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு இந்த முறை அந்த கேமரா வீட்டுக்குள் நுழைய மலையாள நடிகை பக்காவாக ரெடியாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

  உள்ளே போனாலும்

  உள்ளே போனாலும்

  அந்த வீட்டுக்கு உள்ளே போனாலும் தனது தனித்துவத்தை காட்டினால் தான் ரசிகர்கள் மத்தியில் ஆர்மி எல்லாம் உருவாகும் இல்லை என்றால், முதலுக்கே மோசம் என்பது போல கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளும் டோட்டலாக காலியாகி விடும் அபாயமும் இருப்பதை அந்த தோழி நடிகை எடுத்து சொன்னாரா என்று தான் தெரியவில்லை என டிவி தேனப்பன் புலம்பி வருகிறார்.

  English summary
  Glamour actress ready to enter in popular reality show after her friend suggests for her cinema career.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X