“நான் தான் பெஸ்ட்”னு நிரூபிக்க.. ஒரே படத்தில் போட்டி போட்டு கவர்ச்சிக் காட்டிய நாயகிகள்!
விரைவில் ரிலீசாக இருக்கும் படத்தில் இரண்டு நாயகிகளும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டி இருக்கிறார்களாம்.
Recommended Video

சென்னை: விரைவில் ரிலீசாக உள்ள படமொன்றில் நடித்துள்ள இரண்டு நாயகிகளும், படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் தான் அதிகளவில் பேசப்பட வேண்டும் என போட்டி போட்டு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளார்களாம்.
தற்போது தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வெறொரு நாயகி நடிக்கிறார் எனத் தெரிந்தால், மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காரணம் அப்படத்தில் தன்னை விட அந்த நாயகியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டுவிடக் கூடாதே என்ற பயம் தான்.
அப்படியே தப்பித் தவறி ஒப்புக் கொண்டாலும், இருவரது கதாபாத்திரத்தையும் சம அளவு கனமானதாக மாற்றுவதற்குள் இயக்குநரின் தலையில் இருக்கும் முடியெல்லாம் கொட்டி விடும். அப்படி பாடாய் படுத்தி எடுத்து விடுவர்.

படவாய்ப்பு பாதிப்பு:
ஆனால், தற்போது நிலைமை அப்படியே தலைகீழ். பெரும்பாலான படங்களில் இரண்டு நாயகிகள் வருகின்றனர். எப்படிப் பார்த்தாலும் அதில் ஒருவரது கதாபாத்திரம் தான் ரசிகர்களிடம் பாராட்டுகளை வாங்குகிறது. இரண்டாவது நாயகியாக நடிக்க சம்மதிக்கவில்லை என்றால், உடனே மும்பையில் இருந்து புதிய நடிகையை இறக்குமதி செய்து விடுகின்றனர். இதனால் இங்குள்ள நடிகைகளுக்கு படவாய்ப்பு பாதிக்கப்படுகிறது.

நடிகைகளின் திட்டம்:
இதனால் இனி இயக்குநர்களை நம்பி பிரயோசனமில்லை என நடிகைகளே புதிய திட்டத்துடன் நடித்து வருகின்றனர். அதன்படி, விரைவில் ரிலீசாக உள்ள வாகை நாயகன் படத்தில் இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். அவர்கள் இருவரும் தங்களது நடிப்பு தான் அதிகம் பேசப்பட வேண்டும் என்ற ஆசையில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

டைரக்டர் அமைதி:
இதனால் அப்படம் ஆபாசப்படமா என எண்ணுமளவிற்கு காட்சிகள் அமைந்துள்ளதாம். எப்படியோ படம் கலர்புல்லாக இருந்தால் சரி என டைரக்டரும் அமைதியாக இருந்து விட்டாராம். நடிகைகளும் தங்களுக்குள் போட்டி போட்டு காட்சிகளை கவர்ச்சியால் நிரப்பி விட்டனராம்.

சூடு பட்ட வாரிசு நடிகர்:
நாயகனுக்கு தான் இதில் கொண்டாட்டம். கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா.. எனும் அளவிற்கு இப்படத்தில் நடிகைகள் இருவரும் கவர்ச்சியில் கலக்கியுள்ளனர். ஆனால் என்ன இந்தப் படம் மூலம் நடிகருக்கும் ஆபாசப்பட நடிகர் என்ற பட்டம் கிடைத்துவிடக் கூடாது. ஏற்கனவே வாரிசு நடிகர் ஒருவர் வெற்றிப்படம் தர வேண்டும் என்ற ஆசையில் இப்படிப்பட்ட படங்களில் நடித்து சூடு வாங்கியது நினைவில் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications











