அதுக்கு அவர் ஓகே.. இதுக்கு இவங்க ஓகே.. சீக்கிரமே நம்பர் நடிகை குட் நியூஸ் சொல்லப் போறாங்களாம்!
சென்னை: நம்பர் நடிகையிடம் இருந்து விரைவிலேயே குட் நியூஸ் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Recommended Video
எல்லாம் அந்த விஷயமாகத்தான் என காது கடிக்கின்றனர் கோலிவுட் வாசிகள்.
காதலை பகிரங்கமாக அறிவித்து வருவதே அந்த சந்தோஷமான செய்தியை சீக்கிரம் சொல்லத்தான் என்கின்றனர்.

எதுவும் செட்டாகவில்லை
நம்பர் நடிகைக்கு காதலிக்கிறதுன்னா அவ்வளவு பிடிக்குமாம். ஒருவரை பிடித்து விட்டால் போதும் அந்த அளவுக்கு உயிரையும் கொடுத்து காதலிப்பாராம். ஆனால், அதே சமயம் தன் மீது நம்பிக்கை இல்லையென்றால், அந்த காதலை உடனடியாக தூக்கியெறியவும் தயங்க மாட்டாராம். அப்படித் தூக்கி எறியப்பட்ட ஏகப்பட்ட காதல் கதை உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அது வேண்டாம்
காதல் கதைகளுடன் நடிகை வலம் வருவது தனது சினிமா மார்க்கெட்டுக்கு எந்த பக்க விளைவுகளையும் உருவாக்கவில்லை என்றும், ஆனால், திருமணம் செய்து கொண்டால் அது பெரிய முட்டுக்கட்டையாக மாறிவிடும் என்றும் உறுதியாக இருக்கும் அந்த பிரபல நடிகை, அதுக்கு மட்டும் நோ சொல்லி வருகிறார்.

அதுதான் காரணமா
இவரது லவ் பிரேக்கப்களுக்கு அதுதான் காரணமா என்கிற கோணத்திலும் சந்தேகங்கள் கிளம்பி வருகின்றன. கடந்த சில வருடங்களாக இவரிடம் எந்தவொரு கண்டிஷனும் போடாமல், அன்பை மட்டுமே எதிர்பார்த்து வருவதால் தான் அந்த இயக்குநருடன் எந்த பிரச்சனையும் இல்லாமல் இணைந்து வாழ்கிறாராம்.

கடைசி வரைக்கும்
ஆனால், இயக்குநரின் வீட்டார் தொடர்ந்து எப்போது கல்யாணம் என கேட்டு நச்சரித்து வருவதும், நண்பர்கள், மீடியாக்கள், ரசிகர்கள் என பலரும் அதே கேள்வியை கேட்டு தொல்லை கொடுத்து வந்த நிலையில், கடைசி வரைக்கும் காதலித்துக் கொண்டே இருக்கப் போவதாக அந்த இயக்குநர் அப்படி ஒரு போடு போட்டது. இப்போ அவருக்கு சீக்கிரமே குட் நியூஸ் கிடைக்க வழி வகுத்துள்ளதாம்.

ஓகே சொல்லிட்டாராம்
பல ஆண்டுகளாக அந்த புள்ளையும் நமக்காக இருக்குதேன்னு இப்போதான் அந்த ஃபீலிங்கே அந்த நடிகைக்கு வந்துள்ளதாம். வயசும் ஆகிட்டே போறதால, கையில் இருக்கும் ஒரு சில படங்களை முடித்த கையோடு சீக்கிரமே வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம் என இயக்குநருக்கு ஓகே அந்த விஷயத்தில் ஓகே சொல்லியுள்ளாராம் நடிகை.


Click it and Unblock the Notifications











