பிரபல ஹீரோவுக்கும், நடிகைக்கும் இடையே செம டீலிங்காமே!

By Siva

சென்னை: முன்னணி நடிகர் ஒருவருக்கும், இளம் நடிகைக்கும் இடையே உள்ள புரிதல் பற்றி தான் கோடம்பாக்கத்தில் பேச்சாக உள்ளது.

எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் கோலிவுட்டிக்கு வந்து ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்டு தனது உழைப்பால் முன்னணி நடிகராகியுள்ளார் அவர். அவரின் வளர்ச்சியை பார்த்து சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் நம்பிக்கை பெற்றுள்ளனர்.

Good understanding between an actor and an actress

படுபிசியாக இருக்கும் அந்த நடிகருக்கும், இளம் நடிகைக்கும் இடையே புரிதல் இருப்பதை பற்றி தான் கோடம்பாக்கத்தில் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது நடிகர் அந்த நடிகையை சிபாரிசு செய்கிறார். பதிலுக்கு நடிகையும் அந்த நடிகரை சிபாரிசு செய்கிறார்.

இந்த காரணத்தால் அவர்களை பற்றி கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் இந்த நடிகை மட்டும் அல்ல அந்த அறிவான நடிகைக்கும் தான் சிபாரிசு செய்தார். ஆனால் அறிவான நடிகை ராசியில்லை என்று நினைத்து சிபாரிசு செய்வதை நிறுத்திக் கொண்டுள்ளார்.

தற்போது சிபாரிசு செய்யும் இளம் நடிகையோ பெரிய இடத்துப் பிள்ளையிடமும் நல்ல பெயர் வாங்கியவர். முன்னதாக அந்த நடிகைக்கும் நடிப்பு ராட்சசனுக்கும் இடையே தொடர்பு என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த விஷயம் நடிகரின் மனைவியின் காதில் விழ அம்மணி ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார்.

அம்மணி நடித்து முடித்துள்ள படம் ஒன்றில் வரும் பாடல் வீடியோ அண்மையில் வெளியானது. அதில் ஒரு இளம் நடிகர் நடிகை மீது கையை வைத்தபடி போஸ் கொடுத்திருந்தார். அவர் கை வைத்திருந்த இடத்தை பார்த்து சமூக வலைதளங்களில் வேறு மாதிரியாக பேச்சு அடிபட்டது. இப்படி நடிகையின் பெயர் படத்தை விட வேறு விஷயங்களுக்காக தான் அதிகமாக அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X