»   »  பரத்துக்கு கோபிகா செய்த "பூஜை!

பரத்துக்கு கோபிகா செய்த "பூஜை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோபிகாவிடம் சமீபத்தில் பரத் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டாராம்.

"பாய்ஸ் படத்தில் அறிமுகமானாலும் மலையாளத்தில் வெளியான "4 தி பீப்பிள் என்ற படம் மூலம் தான் பரத் பரபரப்பாகபேசப்பட்டார். இதற்கு அடுத்து "காதல் படம் அவருக்கு நல்ல பிரேக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து மளமளவென படங்களில் புக் ஆகத் தொடங்கியுள்ள பரத், சமீப காலமாக தனது இமேஜை நிலைநிறுத்துவதற்காக பல தேவையில்லாத "சேஷ்டைகளில் இறங்கியுள்ளாராம்.

தனது பெயர் பத்திரிக்கைகளில் அடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக இவராகவே சில வதந்திகளை கோலிவுட்டில்உலவ விட்டுள்ளாராம். அதில் ஒரு வதந்திதான், கோபிகாவுடன் பரத்துக்கு காதல் என்ற செய்தி.

கோபியும் நானும் தினமும் ஒரு பத்து முறையாவது செல்போனில் பேசிக்கொள்வோம். ஒரு நாள் நாங்கள் இருவரும்பேசாவிட்டால் கூட அன்று எங்களுக்கு தூக்கமே வராது. சாப்பிடக் கூட பிடிக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..! இப்படிநீளுகிறது இவரது ரீல்.

இதில் உச்சக்கட்ட தமாஷ் என்னவென்றால் கோபிகாவிடம் செல்போனே கிடையாதாம். படப்பிடிப்புகளுக்கோ அல்லது வேறுஎங்கும் செல்லும் போது செல்போனை இவர் பயன்படுத்துவதே கிடையாது.

பரத்தின் புருடாவை கேள்விப்பட்ட பலரும் கோபிகாவை தொடர்பு கொண்டு அப்படியா சேச்சி என்று கவலைப்பட்டுள்ளனர்.பரத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, அவருடன் அதிகம் பேசியதும் இல்லை, இப்படி இருக்கையில் எப்படிஇப்படி ஒரு வதந்தி கிளம்பியது என்று குழம்பிய கோபிகா, ரகசிய விசாரணையில் இறங்கியபோதுதான், இது பரத்தே கிளப்பிவிட்ட வதந்தி எனத் தெரிய வந்தது.

இதையடுத்து பரத்தின் செல்போன் நம்பரைப் பிடித்த கோபி, அவரை விளாசு விளாசென்று விளாசித் தள்ளி விட்டாராம். அப்படி,இப்படியென்று சமாளித்துப் பார்த்த பரத், பொறுக்க முடியாமல் தன் பங்குக்கு கொஞ்சம் கோபமாக பேசி விட்டாராம். அத்தோடுபோனை கட் செய்துள்ளார் கோபிகா.

போன் பேசி முடித்த பிறகு இருவரது காதுகளிலும் ரத்தம் வராத குறையாம். அந்த அளவுக்கு காரசாரமாக சண்டைநடந்துள்ளதாம். ஏற்கனவே பரீட்சையில் பிட் அடித்துப் பிடிபட்டு அசிங்கப்பட்டார் பரத்.

அந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டு ஒரு மாதிரியாக கோலிவுட்டில் நல்லபடியாக கால் பதித்துக் கொண்டிருக்கும் வேளையில்இது போன்ற "பில்டப் வேலைகள் தேவையா என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil