அந்த ஹீரோவா? வேண்டாம், இப்படியொரு பிரச்னை இருக்கு.. நடிகையை எச்சரித்த ஹீரோயின்ஸ்!
சென்னை: அந்த ஹீரோவுடன் நடிக்க வேண்டாம் என்று ஹீரோயினை சில நடிகைகள் எச்சரித்துள்ளனர்.
இந்தி சினிமாவில் இருந்து வந்தவர், அந்த ஹீரோயின். சில படங்களில் நடித்த அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன.
ஒரு படத்தில் தன்னுடன் நடத்த அந்த இளம் ஹீரோவுடன் நட்புடன் பழகினார்.

சட்டு புட்டென்று
ஏற்கனவே திருமணத்துக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார், அந்த ஹீரோ. பிறகென்ன, நட்பு அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல, வழக்கம் போல காதலில் விழுந்தது ஜோடி. நடிகையின் பாலிவுட் குடும்பமும் காதலுக்கு ஒகே சொல்ல, நாட்களை கடத்தாமல் சட்டு புட்டென்று திருமணத்தை நடத்தி முடித்துவிட்டனர்.

வருகிறது அழைப்பு
திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடித்து வருகிறார், அந்த நடிகை. இப்போது அவர் நடித்த சில படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கின்றன. மற்ற மொழிகளில் இருந்தும் நடிகைக்கு வருகிறது அழைப்பு. கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அவர், அவற்றில் நடித்து வருகிறார்.

ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்
கொரோனா காலத்தில் கணவருடன் சென்னையில் இருந்த நடிகை, இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அது சீனியர் ஹீரோ ஒருவர் நடிக்கும் தெலுங்கு படம். ஹீரோ சீனியர் என்பதால் பெரும்பாலான நடிகைகள் மறுத்துவிட்டார்களாம். ஹீரோயின் தேடுவதற்கே சில மாதங்கள் ஆகிவிட்டதாம்.

சுத்தமாக இல்லை
கடைசியில், வாய்ப்பில்லாமல் இருக்கும் அந்த கேரள நடிகை வந்தார். ஹீரோவுக்கும் ஹீரோயினுக்குமான கெமிஸ்ட்ரி சுத்தமாக இல்லாததால், அவரிடம் விஷயத்தைச் சொல்லி நீக்கிவிட்டனர். இந்நிலையில்தான் இந்த நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இன்டஸ்ட்ரி நிலைமை
இதுபற்றி தகவல் வெளியானதும், அந்த நடிகையிடம், சீனியர் ஹீரோவுடன் நடக்க வேண்டாம், பிறகு இளம் ஹீரோக்கள் நடிக்க அழைக்கமாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள் சில ஹீரோயின்கள். இதுதான் இன்டஸ்ட்ரி நிலைமை என்றாலும், அந்த நடிகை, 'பரவாயில்லை, நான் ஒப்புக்கொண்டுவிட்டேன், அதனால் நடிக்கிறேன்' என்று சொல்லிவிட்டாராம் அவர்களிடம்.


Click it and Unblock the Notifications











