Don't Miss!
- Finance
ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்!
- Technology
Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
- News
ரெட் அலர்ட்.. வெள்ள நீரில் மிதக்கும் மும்பை... கொட்டி தீர்த்த கனமழை.. கோவாவிலும் மழையால் மக்கள் அவதி
- Automobiles
பெட்ரோல், டீசல் வண்டிகளை பயன்படுத்த விரைவில் தடை... கால் டாக்சி ஓட்டுபவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அதுக்குள்ள 2வது திருமணமா?... அதிரடி முடிவு எடுத்த இயக்குநரின் மனைவி !
சென்னை : விவாகரத்து பெற்ற பிரபல இயக்குநரின் மனைவி 2வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.
விவாகரத்து பெற்ற இந்த இயக்குநர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சிறந்த இயக்குநர் என மக்கள் மனதில் பதிந்தார். இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்று, சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவருடைய படத்தில் கதையைவிட கதாபாத்திரம் மிகவும் உயிரோட்டமாக இருக்கும். இது தான் இவரது திரைப்படம் வெற்றிப்பெற முக்கிய காரணமாகும்.

பட வாய்ப்புக்காக அலைந்த திரிந்துக்கொண்டு இருந்த ஒரு நடிகர் இந்த இயக்குநரின் படத்தில் நடித்த பிறகே திறமையான நடிகர் என பெயர் எடுத்து தற்போது உச்ச நடிகர்களின் பட்டியலில் உள்ளார். இந்த இயக்குநர் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி இருந்தாலும் இவருடைய இயக்கத்தில் நடிக்க நடிகைகள் மிகவும் பயப்படுவார்களாம் அந்த அளவுக்கு இவர் மிகவும் கோபக்காரர்.
திருமணமான இந்த இயக்குநருக்கு சமீபத்தில் தான் விவாகரத்து கிடைத்தது. இவர்களின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும், இயக்குநரின் செயலால் அவரது மனைவி அவரை விட்டு பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த பின்பே அண்மையில் விவாகரத்து கிடைத்துள்ளது.
எப்படி எல்லாமோ ஐஸ் வைக்கும் ஒல்லி நடிகை.. மீண்டும் சிக்குவாரா அந்த மாஸ் ஹீரோ.. கோலிவுட் கிசுகிசு!
விவாகரத்து பெற்ற இந்த இயக்குநரின் மனைவி 'பூ' 2வது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இவர்களின் விவாகரத்துக்கு பிரபல அரசியல் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் மகன் தான் காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், பரவி வரும் இந்த தகவலால் பலர் அதற்குள்ள 2வது திருமணமா என கேட்டு வருகின்றனர்.
ஆனால், அந்த இயக்குநரின் மனைவியோ 2வது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், வளர்ந்த மகள் இருக்கும் போது மறுமணம் குறித்து யோசிக்கவில்லை. இனி திருமணம் என்ற பேச்சுக்கே இடம் என்று அதிரடியாக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.