"கிசு கிசு" கார்னர்
புதுசு புதுசா சினிமாவில் ஏதாவது செய்பவர்களுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது.
சூப்பர் கலைஞன் வீட்டில் ஒல்லி ரன் நடிகையால் பிரச்சனை என்றால் புதுமைப் பித்தனான அந்தஇயக்குனர்-நடிகர் வீட்டில் குண்டு நடிகையால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தனது புதிய ரோடு படத்தில் நடித்த ராமபிரானின் மனைவியின் பெயர் கொண்ட அந்த நடிகையை சினிமாஸ்டைலில் அதிரடியாய் காதல் திருமணம் செய்தார் அந்த பா நடிகர்.
சிறந்த தம்பதிகளாக இரண்டு குழந்தைகளைப் பெற்று, ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்த அவர்கள்இடையே இப்போது பிரச்சனை. இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்.
மனைவி நடிகைக்கு நீண்ட நாட்களுக்குப் பின் டிவியில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அவர் நடிக்க ஆரம்பித்ததால்வீட்டில் மனக் கசப்பு இருந்து வந்தது.
இந் நிலையில் தான் எண்டர் ஆனார் கிராமராஜனை மணந்து, அவரிடம் இருந்து பிரிந்து, குண்டக்க மண்டக்கபெருத்துப் போய் டிவியில் நடித்து வரும் மூன்றெழுத்து நளினமான நடிகை.
இந்த நளினத்துக்கும் புதுமை விரும்பிக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய தொடர்பால் வெறுத்துப் போன மனைவிநடிகை தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.
சமீபத்தில் தான் இவர்களின் குழந்தை மணியான இயக்குனரின் படத்தில் சிறப்பாக நடித்து சபாஷ் வாங்கியது.


Click it and Unblock the Notifications