»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரப்பர் நடிகருக்கு அடுத்த தோழி கிடைத்து விட்டாராம்.

கோழிகள் பிடிப்பதில் அதாவது தோழிகள் பிடிப்பதில் ரப்பர் நடிகர் கில்லாடி என்பது கோலிவுட் அறிந்த உண்மை.

அவரிடம் சிக்கும் தோழிகள் அடிக்கடி மாற்றப்பட்டுக் கொண்டே இருப்பர். அதுவும் எல்லோருக்கும் தெரியும்.

சமீபத்தில் அவரிடம் சிக்கிய தோழியான கா.ஜெவையும் இப்போது கழற்றி விட்டு விட்டார் ரப்பர்.

இந்நிலையில் ரப்பருக்கு புதிதாக ஒரு தோழி கிடைத்துள்ளாராம். அந்தத் தோழி யார் தெரியுமா? சில ஆண்டுகளுக்கு முன் "மிஸ் மெட்ராஸ்" பட்டம் வென்றஅந்தத் தோழி, தற்போது ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி காட்டி கதி கலங்க வைக்கும் வகையில் நடித்து வரும் அந்த நடிகையும் ரப்பரும் அடிக்கடி ஜோடியாக காணப்படுகிறார்களாம். பெரிய லெவலுக்குக்கொண்டு வருவதாகக் கூறி அந்தத் "திரி" நடிகையை வளைத்து விட்டாராம் ரப்பர்.

இது எத்தனை நாட்களுக்கோ என்று பொருமிக் கொண்டிருக்கிறார்களாம் அவரால் கழற்றிவிடப்பட்ட பலர்.

"முனீஸ்வரா" படம் வெளியானால் அதில் கவர்ச்சி சூறாவளியாய் வீசியிருக்கும் "ஆப்பிள்" ஒரு சுற்று வருவார் என்று பேசிக் கொள்கிறார்கள்.அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறாராம் அவர். பெயர் ஒன்றே போதுமானது.

மும்தாஜூக்கு போட்டியாக இறக்கப்பட்ட "கும்" நடிகையின் பல பலான படங்களின் வி.சி.டிக்கள் தமிழகத்தின் பல இடங்களிலும் "ஜே ஜே"வென்றுஉலவ ஆரம்பித்துள்ளதாம். இந்த சிடிக்களை உலவ விட்டது "மும்" நடிகைதானாம்.

ம்முட்டி ஹீரோவாக நடிக்கும் "கார் மேகம்" படத்தின் டைரக்டருக்கும், அந்தப் படத்தின் ஹீரோயினுக்கும் இடையே காதல் மிகவும் நெருக்கமாகிவிட்டதாம். இதனால் படத் தயாரிப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாம். உச்சகட்டமாக டைரக்டரும் மனைவி, குழந்தையை பிரிந்து அந்தப்"பிரியமான" நடிகையின் வீட்டிலேயே இருக்கிறாராம்.

இந்தப் "பிரிய" நடிகை குறித்து சமீபத்தில் வெளியான தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளதாம். இந்நடிகை ஏற்கனவே பல மலையாளபலான படங்களில் கும்மாளம் போட்டுள்ளாராம். ஆனால் புதுமுகம் என்று டூப் விட்டுள்ளார் இவர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil