போயும் போயும் அந்த இயக்குநருக்கிட்ட தலையை கொடுத்துட்டாரே இந்த நடிகர்.. ச்சு கொட்டும் கோடம்பாக்கம்!

சென்னை: சாமி பெயரை கொண்ட அந்த நடிகரின் அடுத்த பட இயக்குநரை அறிந்த ரசிகர்கள் போயும் போயும் அவருடனா என ச்சு கொட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அந்த சாமி பெயரை கொண்ட நடிகர். சின்ன ஸ்க்ரீனில் ரொம்பவே கஷ்டப்பட்டு பெரிய திரைக்கு வந்தவர் அந்த நடிகர்.

முன்னணி நடிகரின் படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் அறிமுகமானார் அந்த நடிகர். சிரிப்பு, நடிப்பு, டான்ஸ் என எல்லாவற்றிலும் பட்டையை கிளப்பினார் நடிகர்.

நடிகர் மீது காண்டான நட்பு நடிகர்

நடிகர் மீது காண்டான நட்பு நடிகர்

ஒரு கட்டத்தில் அறிமுகப்படுத்திய நட்பு நடிகரின் பட வாய்ப்புகளும் அந்த நடிகருக்கே போனது. இதனால் கடுப்பானார் இந்த நண்பர் நடிகர். இதனால் இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டது. இன்னமும் அவர்களின் பிரச்சனை தீரவில்லை.

ஹிட் கொடுக்க முடிய வில்லை

ஹிட் கொடுக்க முடிய வில்லை

அடுத்தடுத்து பல படங்களில் நடித்த அந்த சாமி பெயர்களை கொண்ட நடிகர், தயாரிப்பிலும் குதித்தார். நடிகராக இருந்த வரை ஹிட் கொடுத்த அவரால் தயாரிப்பாளர் ஆன பிறகு ஹிட் கொடுக்க முடியவில்லை.

போட்ட காசை கூட எடுக்க முடியாமல்

போட்ட காசை கூட எடுக்க முடியாமல்

நடிக்க தேர்வு செய்த படமும் சரி தயாரிக்க தேர்வு செய்த படமும் சரி எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. டாப் நடிகைகளுடன் ஜோடி போட்ட படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் போட்ட காசை கூட எடுக்க முடியாமல் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கினார் நடிகர்.

கடன் தொல்லை கழுத்தை நெறிக்க

கடன் தொல்லை கழுத்தை நெறிக்க

எல்லாவற்றுக்கும் காரணம் தன்னிடம் பணியாற்றிய ஒருவர் தான் என மேடைகளில் பொறிந்து தள்ளினார் நடிகர். கடன் தொல்லை கழுத்தை நெறிக்க என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய நடிகர் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பக்காவாக பயன்படுத்தி வருகிறார்.

அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம்

அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம்

சாமி பெயர்களை கொண்ட அந்த இளம் நடிகருக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று அடுத்தடுத்த படங்களில் நடிகருடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் நடிகரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சம்பளத்தை உயர்த்திய நடிகர்

சம்பளத்தை உயர்த்திய நடிகர்

அதனை தொடர்ந்து அக்கட தேசத்து இயக்குநரின் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர். இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்காக சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார் நடிகர். இது நடிகரின் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது.

தமிழ் படத்தையே ஆங்கில படம் போல்

தமிழ் படத்தையே ஆங்கில படம் போல்

இந்நிலையில் சாமி பெயர் கொண்ட நடிகர் அடுத்த படத்தில் கூட்டணி வைத்திருக்கும் இயக்குநர் குறித்து அறிந்த ரசிகர்களும் கோடம்பாக்கத்தினரும் கவலை அடைந்துள்ளார்களாம். தமிழ் படத்தையே ஆங்கில படம் போல் எடுப்பார் அந்த இயக்குநர். முழுக்க முழுக்க ஆங்கில வசனத்தால் திணறவிடுவார் இந்த அமைதிக்கு பெயர் போன இயக்குநர்.

ஜவ்வு மிட்டாய் கணக்காய் இழுத்து தள்ளுவார்

ஜவ்வு மிட்டாய் கணக்காய் இழுத்து தள்ளுவார்

அதோடு அவர் இயக்கும் படங்களும் அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்துவிடாது. இழு இழு என ஜவ்வு மிட்டாய் கணக்காய் இழுத்து தள்ளுவார் இயக்குநர். நடிகர்களில் எப்படி விரல் நடிகரோ அதேபோல் இயக்குநர்களில் இவர்.

குளத்தில் போட்ட கல் போல

குளத்தில் போட்ட கல் போல

முன்னணி நடிகர்கள் பலர் இவரது படங்களா என கேட்டு தலை தெறித்து ஓடுகின்றனர். இதனால் அவரது புராஜெக்ட்டுகள் பல குளத்தில் போட்ட கல் போல அப்படியே கிடக்கிறது. இந்நிலையில் அந்த இயக்குநருடன் கூட்டணி வைத்து தலையை கொடுத்துள்ளார் இந்த நடிகர்.

வட்டிதான் குட்டி மேல் குட்டி போடும்

வட்டிதான் குட்டி மேல் குட்டி போடும்

இதனை அறிந்த கோடம்பாக்கத்தினர் நடிகருக்கு இருக்கும் கடன் பிரச்சனையில் அந்த இயக்குநரை நம்பினால் வட்டிதான் குட்டி மேல் குட்டி போடும் என புலம்புகிறார்களாம். நல்ல இயக்குநர், நிச்சயம் ஹிட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இயக்குநரை அரவணைத்து கொண்டுள்ளாராம் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X