நண்பரால் கடனாளியான பிரபல நடிகர்... கோடி கோடியாக சம்பாதித்தும் சேவ் பண்ண முடியலையாம்!
சென்னை: நண்பரால் கடனாளியான பிரபல நடிகர் வெளியே சொல்லாமல் கடன்களை அடைத்து வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அந்த இளம் நடிகர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து டாப் நடிகராக உயர்ந்துள்ளார்.
ஆனால் யார் கண்பட்டதோ.. மளமளவென ஏறி வந்த நடிகரின் பிஸ்னஸ் கிராஃப் சட்டென சரிந்தது. கூடவே லாக்டவுனும் தொற்ற நடிகர் நடித்த படங்களை கூட ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

நடிகரால் கடனாளியான நண்பர்
குறிப்பாக தனது நண்பர் தயாரித்த படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாததால் பல கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதனால் தலையில் துண்டை போட்டு விட்டாராம் நண்பர். தன்னால் தானே நண்பருக்கு இந்த நிலைமை என்று எண்ணிய நடிகர் தன்னால் ஏற்பட்ட கடனை தானே அடைக்கிறேன் என முன்வந்துள்ளார்.

நஷ்டத்தை ஈடு செய்யும் நடிகர்
தொடர்ந்து தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் கொடுத்து தன்னால் தனது நண்பருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்து வருகிறாராம் அந்த அசத்தல் நடிகர். சமீபத்தில் நடிகரின் நடிப்பில் வெளியான படம் பெரும் ஹிட்டானது. கன்னாபின்னாவென வசூலை குவித்துள்ளது படம்.

பெரிய தொகையை பெற்ற நடிகர்
இதனால் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளாராம் நடிகர். மேலும் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ள நடிகர் அதற்கான சம்பளமாக ஒரு பல்க் தொகையை பெற்றுள்ளார். ஆனால் பெற்ற பணத்தின் பெரும் பகுதியை தனது நண்பர் பெற்ற கடனை அடைக்க கொடுத்து விட்டாராம்.

ஒரு பைசா கூட சேமிக்க முடியவில்லை
மேலும் மற்ற மொழி படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ள நடிகருக்கு தமிழிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கடனில் தத்தளிக்கும் நடிகர் கோடிகளில் சம்பாதித்தாலும் பணம் வருவதும் தெரியவில்லையாம் போவதும் தெரியவில்லையாம். ஒரு பைசா கூட சேமிக்க முடியாத நிலையில் உள்ளார் நடிகர்.

விரைவில் கடன் அடையும்
சமீபத்தில் வெளியான படத்தின் வெற்றியால் நடிகருக்கு வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றனவாம். இதனால் தான் பட்ட கடனையும் தனது நண்பர் பெற்ற கடனையும் விரைவில் அடைத்து விடுவார் என்கின்றது நடிகரின் நட்பு வட்டாரம்.

வாய்ப்பு குவிய இந்த மூவ்தான் காரணம்
இதனைக் கேட்ட கோடம்பாக்கம், தன்னால் ஏற்பட்ட கடனை தானே அடைக்க முன் வந்தாரே... அதற்காகவே அவர் பிரச்சனைகள் விரைவில் தீரும் என புகழ்ந்து வருகிறார்களாம். நடிகருக்கு பட வாய்ப்புகள் குவிய, அவருடைய இந்த மூவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











