அவரு மாடல் அழகிய விட்டு ஓடுறதுக்கு காரணம் அந்த நடிகர்தானாம்.. அதுக்காகதான் வெளியே சொல்லலயாம்!

சென்னை: மாடல் அழகியை அவரது காதலர் திடீரென பிரிவதற்கு காரணம் என முக்கிய நடிகர் ஒருவரின் பெயர் அடிபட்டு வருகிறது.

அண்டை நாட்டை சேர்ந்தவரான அவர் தனியார் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார். அவருக்கும் மாடல் அழகியும் நடிகையுமான ஒருவருடன் காதல் இருந்தது.

இருவரின் காதலும் நிச்சயதார்த்தம் வரை சென்றது. இந்நிலையில்தான் கடந்த சில நாட்களாய் இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தலைப்பு செய்தியாகி வருகின்றனர்.

முன்னாள் காதலர்

முன்னாள் காதலர்

கரன்ட் காதலர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, மாடல் அழகி முன்னாள் காதலருடன் இரவு முழுக்க பார்ட்டி பண்ணியிருக்கிறார். இந்த விஷயத்தை காதலர் வெளியே வந்ததுமே நடிகரின் காதில் போட்டுக் கொடுத்துள்ளனர் நண்பர் பெருமக்கள். அதோடு பிரபல நடிகர் ஒருவருடனும் ரொம்பவே நெருக்கம் காட்டியிருக்கிறார் காதலி.

நடிகருடன் நெருக்கம்

நடிகருடன் நெருக்கம்

மேலும் காதலர் இல்லாத நிலையில் அரைகுறை ஆடையில் அந்த பிரபல நடிகருடன் லேட் நைட் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என பட்டையை கிளப்பியிருக்கிறார் நடிகை. இது தொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காதலரின் பிபியை ஏற்றிவிட்டதாம். அதோடு நடிகருடனான நெருக்கம் குறித்த தகவலும் காதலரின் காதுகளுக்கு சென்று விட்டதாம்.

நடிகரின் பெயர்

நடிகரின் பெயர்

இதனால் கடுப்பில் இருந்த காதலர் சமயம் பார்த்து உனக்கும் எனக்கும் செட்டாகாது என கழண்டு கொண்டாராம். பிரபல நடிகரின் பெயரை இழுத்து விட்டால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும், வந்த வேலையை பார்க்க முடியாது என்று எண்ணிய அவர் நடிகரின் பெயரை இழுக்கவில்லையாம்.

நடிகைகள் காரணம்

நடிகைகள் காரணம்

பெரிய இடத்து நடிகர், பிரபல நடிகர் என்பதால் கழுவும் மீனில் நழுவும் மீனாகி விட்டாராம் காதலர். ஒரு படம் கூட நடித்து வெளியாகாத நிலையில் பெரிய நடிகர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற காரணத்திற்காகவே எதையும் வெளிப்படையாக பேசவில்லையாம் அவர். அதே நேரத்தில் காதலர் இந்த முடிவை எடுக்க 100 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று நெருக்கமான சில நடிகைகள்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X