வீட்ல துக்கம் நடந்து 3 மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள காதலனுடன் குஜாலா.. நடிகையை சாடும் ஃபேன்ஸ்!
சென்னை: இரண்டாவது காதலனுடன் பிரபல நடிகை நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அந்த நடிகை. அக்கட தேசத்தை பூர்விகமாக கொண்ட அவர், வந்த வேகத்தில் இளம் இயக்குநருடன் காதல் கொண்டு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.
இதனால் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் என்று ஆனார். அம்மணி நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றது.

போரடித்த வாழ்க்கை
முன்னணி நடிகையாக மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போதே இளம் இயக்குநரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார் நடிகை. இனிமேல் நடிக்க மாட்டேன், கணவனே கண்கண்ட தெய்வம் என்று சத்தியம் எல்லாம் செய்து விட்டு மருமகளானார் நடிகை. ஆனால் திருமணம் ஆன மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே அந்த வாழ்க்கை போரடித்துவிட்டது அம்மணிக்கு.

மீண்டும் சினிமா
இரவு பார்ட்டி, குடி, கும்மாளம் என இருந்த நடிகையால் எரிச்சலடைந்தது குடும்பம். குடும்பத்தினரை எதிர்த்துக்கொண்டு மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். எல்லோம் ஒல்லி நடிகரின் ஆலோசனைப் படியே நடந்தது. இதனால் ஒல்லி நடிகரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார் நடிகை என்று பேச்சு எழுந்து.

மனைவி டோஸ்
ஒரு வழியாக காதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற நடிகை சுதந்திர பறவையாக வாழ்க்கையை கொண்டாடினார். அடிக்கடி நடிகருடன் அவரின் பெயர் அடிப்பட்டது. நடிகரின் வீட்டிலும் இந்த பிரச்சனை பூதாகரமானது. யாருக்கும் நீ வாழ்க்கை கொடுக்க வேண்டாம் என நடிகருக்கு மனைவி தரப்பில் இருந்து டோஸ் விழ அந்த விவகாரம் அப்படியே அடங்கியது.

ஓரங்கட்டப்பட்ட நடிகை
அந்த நேரத்தில்தான் அனைத்திற்கும் துணிந்தார் நடிகை. ஏற்கனவே நடிகையின் பெயர் தமிழ்த் திரைத்துறையில் டேமெஜ்ஜாகி இருக்க நடிகை முற்றும் துறந்து நடித்தால் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கப்பட்டார். அதன் பிறகு பட வாய்ப்புகளே இல்லாமல் ஈ ஓட்டி வரும் நடிகை வெப் சீரிஸ் பக்கம் திரும்பியிருக்கிறார்.

ரசிகர்கள் கவலை
இந்நிலையில்தான் கடந்த 2 மாதங்களுக்கு முன் நடிகையின் வீட்டில் அந்த துக்க சம்பவம் நடந்தது. அதனால் நடிகை கடுமையான மன உளைச்சலில் இருப்பார் என நினைத்தனர் கோலிவுட்காரர்கள். ஆனால் நடிகையோ, ஆண் நண்பர்களுடனும் பெண் தோழிகளுடனும் வாழ்க்கையை கொண்டாடி வருகிறார்.

கட்டிப்பிடித்து..
நடிகை தற்போது காதல் உறவில் உள்ள காதலனுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். அப்போது இருவரும் தனிமையில் இருக்கும் போது எடுத்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. காற்றுக்கூட புக முடியாத அளவுக்கு தனது காதலரை இறுக்கி கட்டிப்பிடித்திருந்தார் நடிகை.

கடுப்பான ரசிகர்கள்
இதனை பார்த்து கடுப்பாகி இருக்கின்றனர் ரசிகர்கள். தொடர்ந்து அடிமேல் அடி விழுந்து வருகிறது. விவாகரத்து, பட வாய்ப்புகள் இல்லை, வீட்டில் நிகழ்ந்த மரணம் இப்படி பிரச்சனைகள் அடுக்காய் வரும் நிலையில் அதற்காக கொஞ்சம் கூட வருத்தப்படாமல் இப்படி காதலனுடன் குஜாலாய் இருக்கிறாரே என விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











