நான் எப்போ அப்படி சொன்னேன்.. ரீஎன்ட்ரியான நடிகை திடீர் பல்டி.. தலையை சொரியும் மலையாள சினிமா!

சென்னை: பீக்கில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு அக்கட தேசத்தில் செட்டிலான நடிகை தற்போது திடீரென மாற்றி பேசுவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மலையாள தேசத்தை சேர்ந்த அந்த நடிகை குழந்தை நட்சத்திரமாக அம்மாநில மொழி படங்களில் அறிமுகமானார். அப்போதே அள்ளும் அழகால் கவர்ந்த அவரை பார்த்த பிரபலங்கள், நிச்சயம் வருங்காலத்தில் பெரிய நடிகையாக வருவார் என்றனர்.

அதன்படியே குமரியானதும் அம்மொழி படங்களிலேலே நாயகியாக அறிமுகமானார். கொஞ்சும் அழகை கண்ட தமிழ் சினிமா அவரை தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தியது.

வசீகரம்

வசீகரம்

தமிழில் நடித்த முதல் படத்தின் மூலமே தனது அழகாலும் வசீகர தோற்றத்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் ஸ்ட்ராங்காக அமர்ந்தார் நடிகை. முதல் படமும் நல்ல ஹிட் கொடுத்ததால். அடுத்தடுத்த படங்களில் புக்கானார் நடிகை. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு மூத்த நடிகைகளின் பொறாமைக்கு ஆளானார்.

கேட்டை மூடினார்

கேட்டை மூடினார்

நல்ல பீக்கில் இருந்த போதே திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். மலையாள தேசத்தில் சினிமா குடும்பத்தை சேர்ந்த வாரிசு நடிகரை கட்டிக்கொண்டு குடும்பம் நடத்த தொடங்கினார் நடிகை. பின்னர் எத்தனையோ இயக்குநர்கள் அம்மணியே நடிக்க அழைத்தும், முடியவே முடியாது என்று கூறி கேட்டை மூடி விட்டார்.

குத்து விளக்கு

குத்து விளக்கு

குடும்பமும் கணவரும்தான் முக்கியம் என்று கூறிய நடிகை, நடிகர் கணவரின் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று சாப்பாடு கொடுப்பது, பரிமாறுவது என முழு நேர குடும்ப குத்து விளக்கானார் நடிகை. ஆனால் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் தலைக்காட்டினார்.

ஐடியாவே இல்லை

ஐடியாவே இல்லை

இதனால் அம்மணி மீண்டும் நடிக்க வந்துவிட்டார் போல என்று நினைத்து பல இயக்குநர்கள் அம்மணி வீட்டின் கதவை தட்டினர். ஆனால் அப்போதும் முடியவே முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் நடிகை. படத்தில் நடிக்கும் ஐடியாவே இல்லை என்றும் கூறிவிட்டார். இதனால் என்ன ஆச்சு இந்த நடிகைக்கு என குழம்பினர் இயக்குநர்கள்.

ரசிகை என்பதால்தான்

ரசிகை என்பதால்தான்

தமிழில் தல நடிகரின் படத்தில் அம்மணி மீண்டும் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது. அதுதொடர்பான அப்டேட்ஸ்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் தகவல் உண்மைதான் போல என்று எண்ணினர். ஆனால் நான் அவரின் ரசிகை என்பதால் அப்டேட்ஸ்களை வெளியிட்டேன் அவ்வளவுதான் என்றார்.

நடிகை அந்தர் பல்டி

நடிகை அந்தர் பல்டி

இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கேப்புக்கு பிறகு மீண்டும் கணவருக்கு ஜோடியாக படத்தில் நடித்து வருகிறார் நடிகை. இதைத்தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்றீர்களே இப்போது நடிக்கிறீர்களே என்று கேட்டதற்கு நடிப்பதை நிறுத்திவிட்டதாக யாரிடமும் நான் சொல்லவில்லை என அந்தர் பல்டி அடித்துள்ளார் நடிகை.

தலையை சொரியும் மல்லுவுட்

தலையை சொரியும் மல்லுவுட்

மேலும் நடிப்பதை நிறுத்தும் எந்த ஒரு எண்ணமும் தனக்கு இல்லை என்றும் கதையும் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன் என்றும் தெளிவாக கூறி விட்டாராம். இதனைக் கேட்ட மலையாள சினிமா வட்டாராம் என்னதான் ஆச்சு இந்த நடிகைக்கு என தலையை சொரிந்து வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X