சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் பாடகி நடிகை அந்த ஹீரோவுக்குதான் செலவு பண்றாராம்.. ரொம்ப வெவரம்தான்!
சென்னை: அடிக்கடி செய்திகளில் அடிபடும் அந்த பாடகி நடிகை தான் சம்பாதிப்பதையெல்லாம் ஹீரோ ஒருவருக்காக செலவு செய்கிறாராம்.
பாடகியான அவர் கவர்ச்சியான தனது தோற்றத்தால் நடிகையாக அறிமுகமானார். ஒரு சில படங்களில் வந்து சென்ற அவர் மிக விரைவிலேயே ஹீரோயினாக நடித்தார்.
முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து வேலை பார்த்து விட்டார் நடிகை. ஆனால் அவருக்கு என பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு படமும் கிடைக்கவில்லை.

அடிக்கடி செய்தி
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் நடிகை. ஒல்லி நடிகருடன் கடைசியாக நடித்த அவர், திருமணமான ஆன நடிகர் தன்னை ஏமாற்றியது குறித்த கதைகளை கூறி பரபரப்பை கிளப்பினார். அது முதல் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார் நடிகை.

பாடியும் சம்பாதிக்கிறார்
நடிகை தன்னை ஏமாற்றியவரை பற்றி வாயை திறக்கமாட்டாரா அந்த நடிகர் யார் என்ற உண்மை வெளியே வராதா என்று காத்துக்கிடக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் நடிகை குறித்து வேறு விதமான தகவல்கள் தான் வெளியாகி வருகிறது. படங்களில் நடிப்பது மட்டுமின்றி மேடைகளிலும் பாடி சம்பாதித்து வருகிறார் நடிகை.

ஹீரோவுக்கு செலவு
இந்நிலையில் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் ஹீரோ ஒருவருக்கே அள்ளிக்கொடுத்து வருகிறாராம் நடிகை. அதாவது நடிகை ஹீரோ ஒருவருரை வைத்து ரகசியமாக படம் தயாரிக்கிறாராம். அந்த படத்திற்காகதான் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்து வருகிறாராம் நடிகை.

பாடகி நடிகை
தற்போது முன்னணி நடிகருடன் முக்கிய படத்தில் நடித்து வருகிறார் நடிகை. இதன் போட்டோக்கள் அடிக்கடி வெளியாகி வரும் நிலையில் நடிகை குறித்து இப்படி ஒரு தகவலும் பரவி வருகிறது. பல நடிகைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட், ஹோட்டல் என இன்வெஸ்ட் செய்து வரும் நிலையில் பாடகி நடிகையின் இந்த முயற்சியை பார்த்து வெவரம்தான் என பாராட்டுகின்றனர் கோலிவுட்காரர்கள்.


Click it and Unblock the Notifications











