இவங்களும் ஏமாத்திட்டாங்களே.. இனிமே என்ன பண்ண போறோம்.. நொந்து நூடுல்ஸாகி புலம்பும் புடவை நடிகை!

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி முடிந்ததால் புடவை நடிகை புலம்பி வருகிறாராம்.

தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் அந்த நடிகை. பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் சிரிக்க வைக்கும் ஒரு கேரக்டரின் பெயரில் வந்த படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை. அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

டிவி நிகழ்ச்சிகள்

டிவி நிகழ்ச்சிகள்

ஆனால் அதன்பிறகு நடிகைக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் நடிகை. அதோடு பல டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் நடிகை.

இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்களும் இருந்தனர். இந்நிலையில் அந்த நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. இதன் இறுதி நிகழ்ச்சி பிரபலங்கள் பலர் பங்கேற்க வெகு விமரிசையாக நடைபெற்றது.

எதிர்பார்த்த நடிகை

எதிர்பார்த்த நடிகை

இதில் பங்கேற்ற நடிகை தான் இறுதி வெற்றியாளர் ஆவோம் தனக்கு தான் பட்டம் சூட்டுவார்கள் என காத்திருந்தார். ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் விஷயம் வேறு மாதிரியானது. இறுதி போட்டியில் வேறொரு சீனியர் நடிகை வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றார்.

என்ன செய்யப் போகிறோம்?

என்ன செய்யப் போகிறோம்?

இதனால் பெருத்த ஏமாற்றத்தில் இருக்கிறாராம் நடிகை. ஏற்கனவே சினிமா வாய்ப்புகள் இல்லாததால் தவித்த நடிகை இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று எப்படியாவது விட்டதை பிடித்து விடலாம் என கனவில் இருந்தார். ஆனால் இதிலும் தோற்றுப் போக இனி என்ன செய்யப் போகிறோமோ என புலம்பி வருகிறாராம்.

ஈயோட்டுகிறார் நடிகை

ஈயோட்டுகிறார் நடிகை

இந்த நடிகை சேலையிலேயே இடுப்பு மடிப்பை காட்டி புது ட்ரென்ட்டை உருவாக்கினார். இவரை பார்த்து பல முன்னணி நடிகைகளும் சேலையில் அசத்தல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தினர். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனாலும் என்ன பலன் வாய்ப்பில்லாம் ஈயோட்டி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X