வம்பு நடிகை எங்கேயும் போகலையாம்.. அவர்களுக்கு பயந்து அங்கே இங்கேன்னு கிளப்பி விட்டு வருகிறாராம்!

சென்னை: சமூக வலைதளங்களில் வாங்கி கட்டி வரும் அந்த வம்பு நடிகை சிலருக்கு பயந்து உள்ளூரில் இருந்து கொண்டே வெளியூரில் இருப்பது போன்று காட்டி வருகிறாராம்.

கோலிவுட் சினிமாவில் சில முன்னணி நடிகர்களை விளாசி வருகிறார் அந்த வம்பு நடிகை. ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவரை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

முன்னணி இயக்குநர்கள் முன்னணி நடிகர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் வெட்டியாக வம்பிழுத்து வருகிறார்.

தகாத வார்த்தை

தகாத வார்த்தை

பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்களை தேவையில்லாமல் பேசி வைக்க கூடாத இடத்தில் கையை வைத்து விட்டார் அந்த நடிகை. நடிகர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரையும் மனைவிமார்களையும் தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார்.

வார்னிங்

வார்னிங்

அவர் பப்ளிசிட்டிக்காக இதனை செய்கிறார் என்று பலர் கருத்து கூறினாலும் ரசிகர் பெருமக்கள் எப்படி அப்படி பேசலாம் என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆபாச வார்த்தைகளால் ஒரு பக்கம் திட்டி வரும் ரசிகர்கள், உங்களை எங்கு பார்த்தாலும் நீங்கள் அவ்வளவுதான் என வார்னிங் கொடுத்து வருகின்றனர்.

இங்குதான் இருக்கிறேன்

இங்குதான் இருக்கிறேன்

பல இடங்களில் நடிகை மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. பேசிய பேச்சுக்கெல்லாம் தமிழகம் வந்த பிறகு பதில் கொடுக்கப்படும் என்று கூறினர் குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள். இதனால் வீம்புக்கு என்றே நான் தமிழகத்தில் தான் இருக்கிறேன் என சில மாவட்டங்களின் பெயர்களை குறிப்பிட்டார் நடிகை.

எங்கேயும் போகல

எங்கேயும் போகல

மேலும் ஷுட்ங்கிற்காக இங்கே வந்திருக்கிறேன், அங்கே சென்றிருக்கிறேன் என்றும் கூறி வருகிறார். ஆனால் உண்மையில் சர்ச்சை நடிகை தான் சொல்வது போல் வெளியே எங்கேயும் போகவில்லை, நடிகர்களின் ரசிகர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்திருக்கிறார் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.

எதற்கு அந்த வாய்?

எதற்கு அந்த வாய்?

இதனை அறிந்த ரசிகர்கள் இவ்வளவு பயம் இருக்கிற போது எதற்கு அந்த வாய்? ஏன் அவ்வளவு பேச்சு என கேட்டு வருகின்றனர். வயது வித்தியாசம் இன்றி எல்லோரையும் எடுத்தெறிந்து பேசி வரும் வம்பு நடிகையின் வாய்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும் சில சீனியர்கள் கோபத்தில் உள்ளார்கள் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X