மனைவிய பிரிஞ்சதால மதுவுக்கு அடிமையாகலயாம்.. விஷயமே வேறாம்.. அம்பலமாகும் நடிகரின் லீலைகள்!

சென்னை: அந்த நடிகர் தனது காதல் மனைவி குறித்து உருகி உருகி பேசியதெல்லாம் வெறும் நடிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநரின் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அவர். சமீபத்தில் கூட அவரது நடிப்பில் வெளியான படம் ஒன்று பெரும் பாராட்டை பெற்று விருதுகளை குவித்தது.

இவர் தனது கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்த தோழி ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

சந்தேகப் பிராணி

சந்தேகப் பிராணி

இந்நிலையில் கடந்த ஆண்டு தனது காதல் மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர். அதுமுதல் கிடைக்கும் மேடையில் எல்லாம் மனைவி ஒரு சந்தேகப் பிராணி என குறை கூறி வந்தார்.

மனைவியை பிரிந்ததால்

மனைவியை பிரிந்ததால்

ஆனால் அண்மையில் தனது மனைவியையும் குழந்தையையும் பிரிந்ததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையே சீர்குலைந்து போனதாக உருகியிருந்தார் நடிகர்.

பிரபலத்துடன் நெருக்கம்

பிரபலத்துடன் நெருக்கம்

ஆனால் நடிகர் சினிமாவில் ஜொலிக்க தொடங்கிய பின் நடிகைகளுடன் நெருக்கமாக பழகியுள்ளார். குறிப்பாக இதுப்போது நெருக்கமாக இருந்து வரும் ஒரு பிரபலத்துடன் அப்போதே ஓவர் நெருக்கம் காட்டியிருக்கிறார் நடிகர்.

குடித்துவிட்டு டார்ச்சர்

குடித்துவிட்டு டார்ச்சர்

இந்த விவகாரம் மனைவிக்கு தெரியவர, அவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்த நடிகர் குடித்துவிட்டு தனது டார்ச்சர் செய்ய தொடங்கியுள்ளார். இதனை ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்தாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சிம்பத்தியை கிரியேட் செய்ய

சிம்பத்தியை கிரியேட் செய்ய

தற்போது பிரபலம் ஒருவருடன் நெருக்கமாக உள்ளார் நடிகர். அவருடன் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, முகத்துடன் முகம் உரசி என விதம் விதமாக எடுத்த போட்டோக்கள் வெளியானதால் பிளேட்டை மாற்ற முன்னாள் மனைவி குறித்து பேசி நடிகர் சிம்பத்தியை கிரியேட் செய்ய பார்க்கிறார் என்றும் கூறப்படுகிறது.

செம கடுப்பு

செம கடுப்பு

மனைவியை விவாகரத்து செய்ததே அவருடன் கொஞ்சி குலாவதான் அப்படி இருக்கும் போது இப்போது எதற்கு இப்படி நடிக்கிறார் என செம கடுப்பில் இருக்கிறதாம் முன்னாள் மனைவியின் தரப்பு.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

நடிகர் தற்போது சேர்த்துள்ள புதிய ஜோடி, அவர் தயாரித்து பாதியில் கைவிட்ட படங்களை மீண்டும் தூசுதட்டி புதுப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் விரைவில் தனது இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X