இவ்ளோ பேராசை கூடாது.. ஒத்தை விரலை காட்டும் வாரிசு நடிகர்.. ஓட்டம்பிடிக்கும் தயாரிப்பாளர்கள்!

சென்னை: பிரபல வாரிசு நடிகர் திடீரென சம்பளத்தை உயர்த்தியிருப்பது பல தயாரிப்பாளர்களை தலை சுற்ற வைத்துள்ளதாம்.

1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் அந்த நடிகர். வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமா சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்க உச்சம் தொட்டார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரது மூத்தமகன் சினிமாவுக்குள் நுழைந்தார்.

இரண்டு எழுத்து இயக்குநர்

இரண்டு எழுத்து இயக்குநர்

சாக்லேட் பாயாக சினிமா கேரியரை தொடங்கிய அந்த வாரிசு நடிகர் இரண்டு எழுத்து இயக்குநரின் படத்தின் மூலம் பட்டைத் தீட்டப்பட்டார். இதனால் என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பாக செய்யும் அளவுக்கு வளர்ந்தார் அந்த வாரிசு.

ஒரு கோடியாக உயர்த்தி

ஒரு கோடியாக உயர்த்தி

மினிமம் கியாரண்டி என்று கூறப்பட்ட நடிகர் லட்சங்களில்தான் சம்பளம் பெற்று வந்தார். ஆனால் திடீரென தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம் தயாரிப்பாளர்கள்.

நடிகரின் பேராசை

நடிகரின் பேராசை

வாரிசு நடிகர் இப்படி ஒத்தை விரலை காட்டுவதை பார்த்த தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகிறார்களாம். நடிகரின் பேராசையால் தனக்காக வாய்ப்பை சின்னத்திரை நடிகர் ஒருவரிடம் பறிகொடுத்தார்.

ரொம்பவே கறார்

ரொம்பவே கறார்

இதேபோல் நடிகரின் சம்பள உயர்வு விவகாரத்தால் பல படங்களின் வாய்ப்புகள் பறிபோய் வருகிறதாம். சம்பளத்தை உயர்த்தியிருப்பதோடு ரொம்பவே கறாராகவும் இருக்கிறாராம் வாரிசு.

அப்பா போல் இல்லை

அப்பா போல் இல்லை

நடிக்கும் படங்களிலும் தயாரிப்பாளர்களின் பாரத்தை ஏற்றிவிட்டு விடுகிறாராம் நடிகர். இதனால் படங்களில் நடிகரை ஒப்பந்தம் செய்யவே அஞ்சுகிறார்களாம் தயாரிப்பளார்கள். நடிகருக்கு நெருக்கமானவர்களிடம் அப்பா போல் இல்லை மகன் என்றும் புலம்பி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X