Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News கடனுக்காக இரவில் அசிங்கமாக பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்? தேனியில் குடும்பமே தற்கொலை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் நடத்தியும் பலன் இல்லாம போயிடுச்சே.. புலம்பும் இடுப்பு நடிகை!
சென்னை: வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் நடத்தியும் பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததால் ரம்மியமான நடிகை புலம்பி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானவர் அந்த ரம்யமான நடிகை. தொடர்ந்து விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களில் தான் நடித்துள்ளார்.
கல்யாணப் பொண்ணா எப்படி கலக்குறாரு பாருங்க வித்யூலேகா.. குடும்பத்தோடு சென்று வாழ்த்திய செல்வராகவன்!
சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனதால் மொட்டை மாடியில் கண்கள் கூச போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
சின்னத்திரை பக்கம் தாவி
போட்டோக்கள் கன்னாபின்னாவென வைரலானதே தவிர சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வோம் என சின்னத்திரை பக்கம் தாவினார் நடிகை. சின்னத்திரையில் பிரபலமான சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பெரிய முதலாளி நிகழ்ச்சி
அதில் கோப்பையை தட்டி வரலாம் என்று எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்காமல் போனது. இதனால் வேறு சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்த நேரத்தில் தான் பெரிய முதலாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
மிஸ் கூல் நடிகை
இதில் ஆரம்பத்தில் மிஸ் கூல், சிரிப்பழகி என பெயர் எடுத்த அந்த நடிகை போக போக பாய்சன் என்ற பெயர் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இறுதியில் மொத்தமாக தனது பெயர் முழுவதையும் டேமேஜ் செய்து கொண்ட அந்த நடிகை சமுக வலைதளங்களிலும் கழுவி ஊற்றப்பட்டார்.
மீண்டும் போட்டோ ஷூட் அஸ்திரம்
பெயர் கெட்டால் என்ன நல்ல பிரபலம் கிடைத்து விட்டதே இதனால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்த நடிகை, மீண்டும் போட்டோ ஷூட் அஸ்திரத்தை கையில் எடுத்தார். கன்னாபின்னாவென கிளாமர் காட்டி மீண்டும் போட்டோ ஷூட் நடத்தி தனது இருப்பை உறுதி செய்தார்.
வாய்ப்புகள் வரிசை கட்டும்
ஆனால் அதன்பிறகு முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஹேப்பியான நடிகை, இனி வாய்ப்புகள் வரிசை கட்டும் என காத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லையாம்.
மூத்தவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு
தன்னை விட அதிகம் பெயர் டேமேஜ் ஆனவர்கள், தன்னை விட வயதில் மூத்தவர்களுக்கு எல்லாம் அடுத்தடுத்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் போது தனக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என புலம்பி வருகிறாராம் அந்த இடுப்பு நடிகை.
என்ன செய்தால் கவனத்தை பெறலாம்?
வாய்ப்புகள் இல்லாததால் போட்டோ ஷூட்டுக்கு செய்த செலவெல்லாம் வீணாகிவிட்டதே என அப்செட்டில் உள்ளாராம் நடிகை. அடுத்து என்ன செய்தால் கோடம்பாக்கத்தினரின் கவனத்தை பெறலாம்? பட வாய்ப்புகள் பெற என்ன செய்யலாம் என நட்பு வட்டாரத்திடமும் உடன்பிறப்புகளிடமும் தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம் நடிகை.