கொரோனான்னு சொன்னதெல்லாம் சும்மாவாம்.. ஆடியோ லாஞ்ச அங்க பண்றதுக்கு காரணமே வேறயாம்!
சென்னை: மாஸ் நடிகர் படத்தின் ஆடியோ லாஞ்சை ஹோட்டலில் வைப்பதற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
Recommended Video
மாஸ் நடிகர் வாத்தியாராக நடிக்கும் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே அரசியல் ஆசையில் உள்ள அந்த நடிகர், தனது ஒவ்வொரு படத்திலும் அரசை சாடி வருகிறார்.
இதுவே படத்திற்கு பெரும் விளம்பரமாக உள்ளது. ஒவ்வொரு படத்தின் போது ஒவ்வொரு பிரச்சனையை கூட்டி வருகிறார் நடிகர்.

பிரச்சனைகள்
படம் ரிலீசான பிறகுதான் பிரச்சனை என்றால் அதற்கு முன்பாக நடக்கும் விழாக்களிலேயே நடிகரை தேடி தானாக பிரச்சனை வந்து விடுகிறதாம். அந்த வகையில் கடைசியாக நடித்த படத்தின் விழாவின் போது கூட ஆட்டம் பாட்டம் என அசத்தினார் நடிகர். அப்போது பெரும் பேச்சு பேசி ரசிகர்களின் நரம்புகளை முறுக்கேற செய்தார்.

கை வைக்காதீர்கள்
கல்லூரியில் நடைபெற்ற அந்த விழாவில் அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் திரண்டதால் திக்குமுக்காடிய போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் கொந்தளித்த நடிகர் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என எச்சரிக்கும் விதமாக பேசினார். இதன் தொடர்ச்சியாக பல பிரச்சனைகள் வெடித்தன.

ஹோட்டலில்
இந்நிலையில் நடிகரின் அடுத்தப் படத்தின் விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதனை ஹோட்டலில் நடத்த முடிவு செய்திருக்கிறது படக்குழு. அதற்கு காரணம் உலகையே அச்சுறுத்தும் கொரோனா தான் என்று கூறப்பட்டது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இப்படி சிம்பிளாக ஆடியோ லாஞ்சை நடத்தி விட்டு தொலைக்காட்சியில் லைவ் செய்து விடலாம் என்று முடிவு செய்ததாக அறிவித்தார்கள்.

மறக்கவில்லையாம்
ஆனால் உண்மையில் காரணம் கொரோனா இல்லையாம். கடந்த முறை வாங்கியதே இன்னும் மறக்க வில்லையாம். அதுபோன்று ஒரு சம்பவம் மீண்டும் நடந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்களாம். இம்முறையும் கூட்டத்தை கூட்டி, ரசிகர்கள் தாக்கப்பட்டால் நடிகர் மீது ரசிகர்களுக்கு கோபம் வந்து விடும் என்பதற்காகவே இப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











