பழைய காதலனை நேருக்கு நேர் சந்தித்ததால் கடுப்பான நம்பர் நடிகை.. ஹோட்டலையே காலி செய்துவிட்டாராம்!

சென்னை: பிரபல நம்பர் நடிகை தனது பழைய காதலனை நேருக்கு நேர் சந்தித்ததால் கடுப்பாகி ஹோட்டலை காலி செய்துவிட்டு கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்கட தேசத்து நடிகையான அந்த நம்பர் நடிகை தமிழ் சினிமாவில் பாடி பில்டரின் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே ஹிட்டாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார் நடிகை.

அப்போது கொழுக் மொழுக் என்ற நடிகையின் மீது கண் வைத்தார் அந்த வாரிசு நடிகர். இதனால் தனது படத்திலும் நம்பர் நடிகை ஒப்பந்தம் செய்து காதலை வளர்த்தார்.

ஜெசிகாவின் இதயத்தில் பிரச்சினை.. நோய் தீர சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

நடிகருடன் காதலில் மூழ்கினார்

நடிகருடன் காதலில் மூழ்கினார்

நடிகரின் பேக் கிரவுண்டை பார்த்து ஓகே சொன்ன நம்பர் நடிகை படத்தை முடிப்பதற்குள் நடிகருடன் காதலில் மூழ்கினார். இதன் விளைவாக படத்திலும் பல அந்தரங்க காட்சிகள் இடம் பெற்றன.

விரலாலே வித்தை காட்டும் நடிகர்

விரலாலே வித்தை காட்டும் நடிகர்

தொடர்ந்து உச்ச நடிகரின் படத்தில் நடித்தார் நம்பர் நடிகை. அதன்பிறகு வாரிசு நடிகருடனான காதலுக்கு எண்ட் கார்டு போட்டார் நடிகை. இதனால் கடுப்பான விரலாலே வித்தை காட்டும் அந்த வாரிசு நடிகர் நடிகையுடன் இருந்த அந்தரங்க போட்டோக்களை இணையத்தில் கசிய விட்டார்.

ஒட்டும் இல்லை உறவும் இல்லை

ஒட்டும் இல்லை உறவும் இல்லை

அதன் பின்னர் இருவருக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என ஆனது. தொடர்ந்து இருவரும் அவரவர் வழியில் சென்றனர். அப்போதுதான் நம்பர் நடிகைக்கு டான்ஸ் நடிகர் இயக்கிய படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

நம்பர் நடிகைக்கு காதல் மலர்ந்தது

நம்பர் நடிகைக்கு காதல் மலர்ந்தது

அந்தப் படத்தில் நடிக்கும் போது அந்த நடிகருடன் நம்பர் நடிகைக்கு காதல் மலர்ந்தது. திருமணமானவர் குழந்தைகள் உள்ளவர் என்றெல்லாம் எதையும் யோசிக்காமல் கண்மூடித்தனமாக அந்த இயக்குநரை காதலித்தார் நடிகை.

இரண்டாவது காதலும் தோல்வி

இரண்டாவது காதலும் தோல்வி

இறுதியில் நடிகையிடம் இருந்து கறக்க வேண்டியதை கறந்து விட்ட எஸ் ஆனார் நடிகர். இதனால் நடிகைக்கு அடி மேல் அடி. இரண்டாவது காதலும் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை, மீண்டும் ஒரு இயக்குநருடன் காதலில் விழுந்தார்.

ஒரே வீட்டில் கணவன் மனைவியாக

ஒரே வீட்டில் கணவன் மனைவியாக

இளம் இயக்குநரான கடவுள் பெயரை கொண்ட அந்த இயக்குநரின் படத்தில் நடித்த போது நம்பர் நடிகைக்கு அவருடன் காதல் மலர்ந்தது. தொடர்ந்து அந்த இயக்குநருடன் ஒன்றாக ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வசித்து வருகிறார் நடிகை.

பக்கத்து மாநிலத்தில் ஷுட்டிங்

பக்கத்து மாநிலத்தில் ஷுட்டிங்

தனது பார்ட்னருடன் சேர்ந்து படங்களை தயாரித்தும் வருகிறார் நடிகை. இந்நிலையில் நம்பர் நடிகை தற்போது விஜயமான நடிகருடன் சமத்தான நடிகையுடன் சேர்ந்து படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் காட்சிகள் பக்கத்து மாநிலத்தில் படமாக்கப்பட்டது.

முன்னாள் காதலன் - கடுப்பான நடிகை

முன்னாள் காதலன் - கடுப்பான நடிகை

அப்போது அங்குள்ள ஹோட்டலில் பார்ட்னருடன் சேர்ந்து தங்கியுள்ளார். அதே ஹோட்டலில் தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலன் தங்கியிருக்கும் தகவலை அறிந்த நம்பர் நடிகை செம கடுப்பாகி விட்டாராம். ருத்ர தாண்டவம் ஆடாத குறையாக ஏற்பாடு செய்தவர்களிடம் கத்தி விட்டு உடனடியாக ஹோட்டலை காலி செய்துவிட்டாராம் நம்பர் நடிகை.

பட்ட காயம் இன்னும் ஆறவில்லை

பட்ட காயம் இன்னும் ஆறவில்லை

இந்த தகவலை அறிந்த கோடம்பாக்கத்தினர் இத்தனை ஆண்டுகள் ஆகியும் தான் நம்பிய காதலர் செய்த துரோகத்தை இன்னும் நம்பர் நடிகையால் மறக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவரது மனம் காயப்பட்டுள்ளது. அதனால் தான் அந்த நடிகரின் மூச்சு காற்று உள்ள திசைய்ல கூட இருக்கக் கூடாது என கிளம்பி விட்டார் என்கின்றனர் கவலையுடன்..

More from Filmibeat

Read more about: gossip கிசுகிசு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X