ஒரே நேரத்தில் 2 பேரை காதலித்த 'சிரிப்பு' நடிகை.. உண்மையை அறிந்து ஓட்டம் பிடித்த ஹீரோ.. திடுக் தகவல்!
சென்னை: சிரிப்புக்கு புகழ் பெற்ற அந்த நடிகை ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான நடிகையாக வலம் வருபவர் ஸ்நேகமான அந்த நடிகை.
சிரிப்புக்கு புகழ் பெற்ற அவர் சினிமாவில் பீக்கில் இருந்த போது சிக்காத சர்ச்சைகள் இல்லை.

ஹீரோவுடன் நெருக்கம்
மார்க்கெட் உச்சத்தில் இருந்த போது முன்னணி ஹீரோ ஒருவருடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் அந்த நடிகை. இதனால் இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகமானது.

வெளியே சுற்றிய போட்டோஸ்
தொடர்ந்து அந்த நடிகருடன் அதிக படங்களில் நடித்த நடிகைக்கு அவருடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஒன்றாக வெளியே சுற்றும் போட்டோக்களும் வெளியானது.

அதிர்ச்சி தகவல்
இதனால் இருவருக்கும் காதல் என கோலிவுட்டில் உறுதியாக பேசப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் இருந்தனர். ஆனால் அப்போதுதான் நடிகை பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது.

தொழில் அதிபருடன் காதல்
அதாவது நடிகை, இளம் ஹீரோவை காதலித்து கொண்டிருந்த போதே வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். தொழில் அதிபரையும் காதலித்து வந்துள்ளார் நடிகை.

ஓட்டம் பிடித்த நடிகர்
நடிகை மீது கொள்ளை பிரியம் கொண்ட அந்த தொழில் அதிபர் நடிகை வந்தால் தங்குவதற்கு என்றே காஸ்ட்லியான ஒரு பங்களாவை வாங்கி கொடுத்திருந்தார். இந்த விஷயம் நடிகரின் காதுகளுக்கு வர, இது சரிப்பட்டு வராது என நடிகையை கழட்டிவிட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டார்.

நின்று போன நிச்சயம்
பின்னர் தொழில் அதிபருடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை, நிச்சயதார்த்தம் வரை சென்றார். ஆனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் நிச்சயதார்த்தமும் நின்றது.

முக்கிய புள்ளி சமாதானம்
இதனால் நடிகை மீது கடும் கோபம் கொண்ட தொழில் அதிபர் நெருக்கமாக இருந்த போட்டோக்களை வெளியிட்டு மானத்தை வாங்கியதும், தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய புள்ளி சமாதானம் செய்து வைத்ததும் வேறு கதை.

குழந்தை குட்டிகள்..
அதன் பின்னர் வேறொரு நடிகரை காதலித்த நடிகை இறுதியாக அவரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது குழந்தை குட்டிகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் அந்த சிரிப்பு நடிகை


Click it and Unblock the Notifications











