பகல்ல நடிச்சு கொடுத்திருந்தா.. ஏன் நைட்ல எடுக்கப்போறோம்.. விபத்துக்கு காரணமே அந்த நடிகர்தானாம்!

சென்னை: ஷுட்டிங் விபத்திற்கு காரணம் அந்த பிரபல நடிகர்தான் என கொந்தளிக்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

பிரமாண்டமாக தயாராகி வருகிறது அந்த படம். ஏற்கனவே வெளியான முதல் பாகம் நல்ல ஹிட் கொடுத்தது.

இதனால் அதே பிரமாண்ட இயக்குநர் மூத்த நடிகரை வைத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கான ஷுட்டிங் தலைநகரின் அவுட்டரில் உள்ள ஒரு பிலிம் சிட்டியில் காட்சியாக்கப்பட்டது.

ஒட்டு மொத்த திரைத்துறை

ஒட்டு மொத்த திரைத்துறை

இந்நிலையில் கடந்த வாரம் இங்கு இரவை பகலாக்கி படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது ஏற்பட்ட கோர விபத்தில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த திரைத்துறையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எரிச்சல்

எரிச்சல்

இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதற்குள்ளேயே படக்குழுவுக்குள் பெரும் மோதல் வெடித்துள்ளது. நடிகர் முந்திக்கொண்டு இழப்பீடு அறிவித்தது. படக்குழுதான் பொறுப்பேற்க வேண்டும் என கடிதம் எழுதியது எல்லாம் தயாரிப்பு தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

கால்ஷீட்படி..

கால்ஷீட்படி..

இந்த விபத்தை வைத்து அரசியல் செய்வதாக தயாரிப்பு நிறுவனம் செம கடுப்பில் உள்ளதாம் படக்குழு. விபத்திற்கு காரணமே நடிகர் தான் என்றும் பேச்சு எழுந்துள்ளது. நடிகர் மட்டும் கொடுத்த கால்ஷீட் படி நடிக்க வந்திருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது என்கிறார்கள், தயாரிப்பு தரப்புக்கு நெருக்கமானவர்கள்.

இரவை பகலாக காட்ட

இரவை பகலாக காட்ட

நடிகர் தன்னுடைய பர்சனல் வேலைகளுக்காக காலம் கடத்தியதால் பகலில் எடுக்கப்பட வேண்டிய அந்தக் காட்சி இரவில் எடுக்கப்பட்டது என்றும், இரவை பகலாக காட்ட வேண்டிய கட்டாயத்திற்காக ஏராளமான லைட்டுகள் கொத்து கொத்தாக பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டுகிறது தயாரிப்பு.

பறிபோயிருக்காது..

பறிபோயிருக்காது..

சொன்னப்படி நடிகர் பகலில் நடித்து கொடுத்திருந்தால், அந்த பிரமாண்ட கிரேன்களும் லைட்டுகளும் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர். அந்த லைட்டுகளின் தேவை இல்லாமல் இருந்திருந்தால் அந்த விபத்தும் ஏற்பட்டிருக்காது, அப்பாவிகள் மூன்று பேரின் உயிரும் பறிபோயிருக்காது என்றும் குற்றம்சாட்டுகின்றனர் தயாரிப்பு குழுவினர்.

நடிகர் அதிர்ச்சி

நடிகர் அதிர்ச்சி

மொத்தத்தில் விபத்துக்கு காரணமே நடிகர்தான் என கோபமாக உள்ளதாம் படக்குழு. தன்னுடைய வேலையை முறையாக செய்யாமல் தயாரிப்பு நிறுவனத்தின் மீது பழியை போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார் நடிகர் என்றும் புலம்புகிறார்களாம் இயக்குநரின் பிரமாண்ட பசியே விபத்திற்கு காரணம் என்று ஆரம்பத்தில் கூறியவர்கள் கூட தற்போது நடிகருக்கு எதிராக கிளம்பி விட்டனர். பாவம் நடிகருக்கு இது பெரும் அதிர்ச்சியாக உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X