அவசரப்பட்டுட்டோமோ.. எல்லாம் ஒன்னு சேர்ந்துட்டாங்களே.. தீவிர யோசனையில் பிரபல நடிகர்!
சென்னை: இயக்குநர் விவகாரத்தில் அவசரப்பட்டுவிட்டோமோ என தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கிறாராம் பிரபல நடிகர்.
பிரபல இயக்குநருக்கும் வளர்ந்த நடிகருக்குமான பிரச்சனைதான் இப்போது கோலிவுட் முழுக்க பேச்சாக உள்ளது. தம்பி தம்பி என நடிகரை புகழ்ந்த இயக்குநர் ஒரேநாளில் நடிகரை தூக்கி எறிந்துவிட்டார்.
ஆனால் நடிகரோ, இயக்குநர் பண்ணிய அட்டூழியத்துக்கெல்லாம் யாரும் என்னைப் போல் பொறுத்து போக மாட்டார்கள் என குமுறுகிறார். படத்தில் இருந்து இயக்குநர் விலகிய பின்னர் என்ன பிரச்சனை என கோலிவுட் முழுக்க மண்டையை குடைந்து வந்தனர்.

எலியும் பூனையுமாக
ஆனால் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகைந்துக் கொண்டிருந்த பிரச்சனையில் பெட்ரோலை ஊற்றினார் நடிகர். அதுவரை உடன் பிறவா சகோதரர்களாக இருந்த இயக்குநரும் நடிகரும் அந்த அறிக்கைக்கு பிறகு எலியும் பூனையுமாக ஆவிட்டார்கள். நடிகரின் அறிக்கையால் செம காண்டாகி விட்டாராம் இயக்குநர்.

பதிலுக்கு பதில்
குறிப்பாக வேறு எந்த தயாரிப்பாளர்களும் அந்த இயக்குநருக்கு இரையாகி விடக்கூடாது என நடிகர் அறிக்கையில் தெரிவித்தது இயக்குநரை செம கடுப்பாக்கி விட்டதாம். இதற்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் பதிலுக்கு பதில் கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டாயத்துக்கு ஆளானாராம் இயக்குநர்.

ஆவேசமாம்
அதுவரை பழகிய தோஷத்திற்காக அமைதியாக இருந்த இயக்குநர், இப்படியே விட்டால் முதலுக்கே மோசம், கேரியருக்கே வேட்டு வைத்து விடுவார் என்றுதான் வாயை திறந்தாராம். இதுதான் சமயம் என நடிகருக்கு ஆகாத சிலரும் இயக்குநருக்கு கொம்பு சீவி விட்டார்களாம். அதனால்தான் அப்படி ஒரு ஆவேசமாம்.

அவசரப்பட்டுவிட்டோமோ
இப்போது நடிகரின் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதோடு வேறு வேறு அதிகார மிக்க விஷயங்களிலும் நடிகருக்கு எதிராக ஒன்று கூடி விட்டார்களாம். இதனால் கலக்கம் அடைந்துள்ள நடிகர் இந்தப் பிரச்சனையை கொஞ்சம் நிதானமாக கையாண்டிருக்கலாமோ என புலம்பி வருகிறாராம். அறிக்கை விட்டு அவசரப்பட்டு விட்டோமோ என்று நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம் நடிகர்.

நடிகர்தான் காரணம்
நடிகர் அடிக்கடி பிரச்சனைகளில் சிக்க காரணமே அவருடன் இருக்கும் நண்பர் நடிகர் ஒருவர்தான் காரணம் என்று ஏற்கனவே கோலிவுட் முழுக்க பேச்சாக உள்ளது. அந்த நண்பரால் நடிகருக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் ஓட்டம் பிடித்து விட்டனர். இந்நிலையில் இயக்குநர் பிரச்சனைக்கும் அவர்தான் காரணம் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.


Click it and Unblock the Notifications