twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாஸ் நடிகரோட பிரன்ட்ஷிப் பேச்சுக்கூட ஸ்க்ரிப்ட்டாமே.. அத்தனை ரிஹர்சல்.. அவ்வளவு டிஸ்கஷனாம்!

    |

    சென்னை: மாஸ் நடிகரின் பிரன்ட்ஷிப் பேச்சுக்கூட ஸ்க்ரிப்ட்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் அந்த நடிகர்கள். இருவருக்குமே ரசிகர்கள் கூட்டம் பெரிது.

    நடிகர்கள் ஒற்றுமையாக இருந்தால் கூட இருவரின் ரசிகர்களும் எலியும் பூனையுமாகதான் இருந்து வருகிறார்கள். அவர்களுக்குள் ஏற்படும் மோதல் ஊரறிந்தது.

    பாடல் வரிகளால் மோதல்

    பாடல் வரிகளால் மோதல்

    சமூக வலைதளங்களே திணறும் அளவுக்கு சண்டை இருக்கும். போட்டி போட்டுக்கொண்டு ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட்டாக்குவார்கள். அந்த வகையில் அண்மையில் இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர். ஒரு நடிகரின் அப்கம்மிங் படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகளால் இந்த மோதல் உருவானது.

    நடிகரின் டிரெஸ்

    நடிகரின் டிரெஸ்

    இதனால் அதிர்ந்து போன படக்குழு பாடல் வரிகளை மாற்றி பட்டியலை வெளியிட்டது. அந்த நாளில்தான் நடிகரின் அப்கம்மிங் காலேஜ் படத்தின் இசை விழா நடைபெற்றது. இதில் அந்த நடிகரை போல அட்டகாசமான டிரெஸ் கோடில் வந்தார் நடிகர். இது பெரும் வைரலானது. பலரின் கவனத்தையும் பெற்றது நடிகரின் டிரெஸ்.

    பேச்சுக்கு பின்னால்

    பேச்சுக்கு பின்னால்

    இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர், அந்த நடிகரை நண்பர் என குறிப்பிட்டு பேசினார். இதனைக் கேட்ட ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இதனால் அந்த அரங்கமே அதிர்ந்தது. அதோடு இரண்டு நடிகர்களின் ரசிர்களும் இணைந்து பிரன்ட்ஷிப் ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தனர். இந்நிலையில் நடிகரின் இந்த பேச்சுக்கு பின்னால் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    பல ரிஹர்சல்

    பல ரிஹர்சல்

    அதாவது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே அது குறித்து தனது குழுவினருடன் பலமுறை டிஸ்கஸ் செய்தாராம் நடிகர். தொகுப்பாளர், இப்படி கேட்க வேண்டும் அதற்கு அப்படி பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியே பிளான் செய்யப்பட்டுவிட்டதாம். அதுகுறித்த ரிகர்சலும் செய்யப்பட்டு பார்த்ததாம்.

    இப்படி ஒரு முடிவு

    இப்படி ஒரு முடிவு

    அந்த நாளில் காலை முதலே மற்றொரு நடிகரின் ரசிகர்கள் டிவிட்டரை தெறிக்க விட்டனர். இந்த தகவல் விழா நடிகரின் காதுகளுக்கு செல்ல, இப்படி எதையாவது பேசினால் ரசிகர்களின் மோதல் முடிவுக்கு வரும் என அறிவுறுத்தப்பட்டதாம். அதன் அடிப்படையிலேயே இப்படி ஒரு ஸ்க்ரிப்ட்டை ரெடி பண்ணி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள். அவர்கள் எதிர்பார்த்தப்படியே சண்டையும் ஓய்ந்து பிரச்சனையும் தீர்ந்தது.

    English summary
    Gossip about a top actor. Top actor friendship speech in function was scripted it seems.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X