அந்த நடிகருக்கு கல்யாணம் கை கூடாம இருக்குறதுக்கு காரணம் இதானாம்.. பொண்ணு கொடுக்கவே பயப்படுறாங்களாம்!
Recommended Video
சென்னை: அந்த நடிகருக்கு கல்யாணம் கை கூடாம இருப்பதற்கு காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா குடும்பத்தை சேர்ந்த அந்த நடிகர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து பல தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
நடிப்பு, இயக்கம், நடனம், இசை, பாடல் என பல வகையிலும் கலக்கி வருகிறார் அந்த நடிகர். கடந்த சில நாட்களாக நடிகருக்கு நேரமே சரியில்லாமல் இருக்கிறது.

நடிக்கும் வாய்ப்பு
படங்கள் தொடர் தோல்வி, சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு செல்லாதது என பல சர்ச்சைகளுக்கு ஆளானார் நடிகர். இதனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து குடும்பத்தினர் அந்தப் பிரச்சனையில் தலையிட்டு நடிகருக்கு மீண்டும் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தனர்.

திருமணம் கைகூடவில்லை
படத்தில் மீண்டும் நடிப்பது உறுதியானதுமே நடிகர் மாலையை போட்டு மலைக்கு நடையை கட்டினார். இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார் நடிகர். ஆனால் வீட்டிற்கு மூத்தவரான அந்த நடிகருக்கு இதுவரை திருமணம் கைகூடவில்லை. ஏற்கனவே பல காதல் தோல்விகளை கண்ட நடிகர் இன்னமும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

கொழுக்கு மொழுக்கு நடிகை
இதனால் குடும்பத்தினரும் பெரும் கவலையில் உள்ளார்களாம். ஏற்கனவே நம்பர் நடிகையுடனான காதல் தோல்வியில் முடிந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிந்தனர். பின்னர் கொழுக்கு மொழுக்கு நடிகையை வளைத்தார் நடிகர்.

இளம் நடிகைகள்
ஆனால் நடிகையின் அம்மா, மகளின் காதலுக்கு சிவப்பு கொடி காட்டியதால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. ஏற்கனவே பல காதல் தோல்வி, பலருடன் கிசு கிசு என நடிகரின் பெயர் முற்றிலும் டேமேஜ்ஜாகி கிடக்கிறது. இதனால் இளம் நடிகைகளை அவருடன் நடிக்க தடை போட்டு வருகின்றனர் அவர்களின் குடும்பத்தினர்.

அச்சப்படுகிறார்கள்
இதன் காரணமாகவே நடிகருக்கு பெண் கொடுக்க ரொம்பவே அச்சப்படுகிறார்களாம். இதனிடையே பெண் தேடி அலைந்து திரிந்த குடும்பத்தினர் தற்போது சாமிதான் கண்ண திறந்து பார்க்கனும் என கூறி கோயில் கோயிலாக அலைய தொடங்கி விட்டார்களாம். அதோடு இந்த வருடத்தில் எப்படியாவது திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம் குடும்பத்தினர்.


Click it and Unblock the Notifications











