ஷுட்டிங் விபத்து.. தன்னை கைய காட்டிட கூடாதுன்னுதான் அவர் முந்தினாராம்.. ஆனாலும் விவகாரமாயிடுச்சாம்!

சென்னை: ஷுட்டிங் விபத்து தொடர்பாக நடிகர் முந்திக்கொண்டு தீயாய் வேலை செய்தது எல்லாம் வீணாய் போனது என பேச்சு எழுந்துள்ளது.

பிரமாண்ட இயக்குநர் உச்ச நடிகரை வைத்து இயக்கும் இரண்டாம் பாகத்தின் ஷுட்டிங் பெரும் இழுபறிக்கு பிறகு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

ஷுட்டிங் தொடங்கிய கையோடு டிவி ஷோ, அரசியல் பிரச்சாரம், ஆப்ரேஷன் என கிளம்பிவிட்டார் நடிகர். இதனால் பிட்டு பிட்டாக ஷுட் செய்யப்பட்டு வருகிறது.

யார் கண் பட்டதோ

யார் கண் பட்டதோ

நடிகரின் கால் ஷீட் பிரச்சனையால் கடந்த கிடைக்கும் நேரத்தை எல்லாம் கொஞ்சமும் வீணாக்காமல் இரவு பகலாக படக்குழு படப்பிடிப்பு வேலைகளை செய்து வந்தது. சென்னைக்கு அருகே பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷுட்டிங் நடத்தப்பட்டு வந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, ஷுட்டிங்கில் திடீரென கோர விபத்து அரங்கேறியது.

உயிர் தப்பினர்

உயிர் தப்பினர்

இதில் மூன்று அப்பாவி உயிர்கள் பரிதாபமாக பறிபோயின. ஆனால் இந்த விபத்தில் உச்ச நடிகர், நடிகை, இயக்குநர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது. விபத்து நடந்த இரவே மருத்துவமனைக்கு சென்றார் உச்ச நடிகர்.

கடுப்பான தயாரிப்பு

கடுப்பான தயாரிப்பு

அடுத்த நாள் இழப்பீடு அறிவித்த கையோடு தயாரிப்பு நிறுவனத்தையும் சாடினார். போதா குறைக்கு தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் எழுதியும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார் நடிகர். இதனால் கடுப்பான தயாரிப்பு தரப்பு நீங்களும்தான் அதற்கு பொறுப்பு என்று காட்டமாக பதில் கொடுத்தது.

சீண்டிய நடிகர்

சீண்டிய நடிகர்

ஏற்கனவே உச்ச நடிகர் கால்ஷீட்டில் சொதப்பியதால்தான் பகலில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் இரவில் எடுக்கப்பட்டன. அப்போது ஏற்பட்ட விபத்தில்தான் உயிரிழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே அவர் மீது கடுப்பில் இருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. இந்நிலையில் கடிதம் எழுதி சீண்டி விட்டுள்ளார் நடிகர்.

அனைத்தும் சொதப்பல்

அனைத்தும் சொதப்பல்

விபத்து தொடர்பாக தன்பக்கம் யாரும் கையை காட்டிடக் கூடாது என்பதற்காகதான் வேகவேகமாக வேலை பார்த்தாராம் நடிகர் ஆனாலும் அனைத்தும் சொதப்பலாகி விட்டது என பேசி வருகின்றனர் கோடம்பாக்கத்தினர். எது எப்படியோ சீக்கிரம் படத்த முடிச்சு உயிரை விட்டவங்களுக்கு சமர்ப்பிக்கிற வழிய பாருங்க என்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X