காப்பீடுல்லாம் பொய்யாம்.. ஷுட்டிங் முடிஞ்சு பேமென்ட்டே 2 லட்சம் பேலன்ஸாம்.. புலம்பும் தொழிலாளர்கள்!

சென்னை: விரல் நடிகர் படத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என வெளியான தகவல் பொய் என்று கூறப்படுகிறது.

நீண்ட இழுபறி, இடை வேளைக்கு பிறகு விரல் நடிகர் தற்போது ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கு பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

கடந்த வாரம்தான் பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு. இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்த படத்தை முன் பாதியில் ஆண் பெயரும் பின் பாதியில் பெண் பெயரும் கொண்ட தயாரிப்பாளர் தயாரிக்கிறார்.

விபத்து - பலி

விபத்து - பலி

இந்நிலையில் பிரமாண்ட இயக்குநரின் இரண்டாம் பாகம் படத்தில் அண்மையில் விபத்து நடைபெற்றது. இதில் மூன்று அப்பாவி உயிர்கள் பரிதாபமாக பரிபோயின. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட வில்லை என புகார் எழுந்தது.

பின் பாதியில் பெண்

பின் பாதியில் பெண்

இது தொடர்பாக உச்ச நடிகர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடுதாசி எழுதினார். இந்நிலையில் விரல் நடிகர் படத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. முன் பாதியில் ஆண் பெயரும் பின் பாதியில் பெண் பெயரும் கொண்ட தயாரிப்பாளரின் இந்த பணியை பலரும் பாராட்டினர்.

பேமன்ட் பேலன்ஸ்

பேமன்ட் பேலன்ஸ்

இந்நிலையில் இந்த தகவல் பொய் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. ஷுட்டிங் முடிந்து பேமென்ட்டே தரவில்லை. அன்றாட ஷுட்டிங் பணியில் கொடுக்கப்பட வேண்டிய பேமென்ட் 2 லட்சம் ரூபாய் பேலன்ஸ் உள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது. பேட்டா உட்பட தொழிலாளர்களுக்கு டெய்லி கொடுக்க வேண்டிய தொகையே இன்னும் கொடுக்கப்பட வில்லையாம்.

வாய்ச்சவடால்தான்

வாய்ச்சவடால்தான்

கொடுக்க வேண்டியதையே கொடுக்கவில்லை. இதை எங்கே செய்யப் போகிறார் என்று புலம்புகிறார்களாம் தொழிலாளர்கள். ஏற்கனவே அந்த தயாரிப்பாளர் வெறும் வாய்ச்சவடால், அதீத தற்பெருமை பிடித்தவர் என்றெல்லாம் பேச்சு உள்ளது. இந்நிலையில் இப்படி ஒரு தகவலை பரப்பி விட்டு, தானாக சிக்கியிருக்கிறார் என்கின்றனர் கோலிவுட்காரர்கள்.

எப்படியெல்லாம் விளம்பரம்

எப்படியெல்லாம் விளம்பரம்

உலக ஹீரோவுக்கு முன்பு நான் தான் செய்தேன், நான் தான் இதை செய்த முதல் ஆள் என்று பெருமை பீற்றிக்கொள்கிறார் தயாரிப்பாளர் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர். அதோடு படம் ஆரம்பித்து பாதி ஷுட்டிங் கூட முடியவில்லை அதற்குள் எப்படியெல்லாம் விளம்பரம் தேடுகிறார்கள் பாருங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X