மனைவியால் கடனில் சிக்கி தவித்த மருமகன்.. காலை வாரிய மாமனார்.. நடிகர் ஓடி ஓடி உழைக்க இதான் காரணமாம்!
சென்னை: ஓல்லி நடிகர் ரெஸ்ட்டே இல்லாமல் ஓடி ஓடி உழைப்பதற்கான காரணத்தை கிசுகிசுக்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர் அந்த மூத்த நடிகர். தனது மகளை மற்றொரு சினிமா நடிகருக்கு மணம் முடித்து வைத்தார்.
அந்த நடிகரும் சினிமாவில் உச்சத்தில் உள்ளார்.
நடிப்பில் தமிழ் சினிமாவில் இந்த தலைமுறையில் தன்னை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பதை போல நவரசத்தையும் காட்டி பட்டையை கிளப்பி வருகிறார்.

கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நடிகர்
கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நடிகருக்கு அங்கீகாராம் கிடைத்து வருகிறது. நடிப்பில் மூத்த நடிகர்களை மிஞ்சுகிறார் இந்த வாரிசு என மார்தட்டி கொள்கிறது கோடம்பாக்கம். கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர் கடந்த சில ஆண்டுகளாக பெரும் கடன் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறாராம்.

கடன் பிரச்சனைக்கு காரணம் காதல் மனைவி
நடிகரின் கடன் பிரச்சனைக்கு காரணம் காதல் மனைவிதானாம். காதல் மனைவியை தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்தார் நடிகர். வந்த வேகத்திலேயே பல படங்களை தயாரித்து பெரிய நிறுவனமாக காட்டிக் கொண்டார்கள்.

தலையில் துண்டை போட்ட நடிகர்
ஆனால் அதில் ஒரு சில படங்கள் மட்டுமே ஹிட்டாகி கை கொடுத்தது. பல படங்கள் நடிகரை தலையில் துண்டை போட வைத்து விட்டதாம். இதனால் கடன் கழுத்தை நெறிக்க, ஸ்டார் நடிகரான மாமனாரிடம் சரணாகதி அடைந்துள்ளார் நடிகர்.

சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்த மாமனார்
மருமகனின் மொத்த பிரச்சனையையும் கேட்ட மாமனார் கடனை அடைக்க சம்பளமே வாங்காமல், மருமகனுக்காகவும் மகளுக்காகவும் ஒரு படத்தில் நடித்து கொடுத்தார். ஆனால் யார் நேரமோ அந்தப் படமும் கைகொடுக்கவில்லை.

சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்த நடிகர்
இதனால் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்த நடிகர் எந்த படமாக இருந்தாலும் ஓகே என கையெழுத்து போட்டு வருகிறாராம். தான் சம்பாதித்த பணத்தில் முக்கால் வாசியை தனது மனைவியாலேயே இழந்துவிட்டாராம் நடிகர்.

இன்னும் கூடிய கடன் சுமை
புதிய வீடு கட்டும் பணியிலும் மருமகன் நடிகர் இறங்கியுள்ளதால் இன்னும் கடன் சுமை கூடியுள்ளதாம். இருப்பினும் எப்படியும் அடைத்து விடலாம் என ஓடிக்கொண்டிருக்கிறாராம் நடிகர். நடிகரின் அடுத்தடுத்த படங்கள் பெரும் வரவேற்பை பெற்றதால் நடிகருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











