அந்த அதிர்ச்சியில் இருந்தே வெளியே வரல.. பாதுகாப்பு கொடுத்தாதான் நடிப்பேன்.. அடம்பிடிக்கும் நடிகை!

சென்னை: பிரமாண்ட படத்தில் நடிக்கும் நடிகை இன்னும் அதற்குள் படப்பிடில் பங்கேற்க முடியாது என அடம் பிடித்து வருகிறாராம்.

பிரமாண்ட இயக்குநரின் இயக்கத்தில் உலக நடிகர் நடிக்கும் படம் பிரமிக்கும் வகையில் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் உள்ளூர் நடிகை மட்டுமின்றி அக்கட தேசத்தை சேர்ந்த நடிகை ஒருவரும் நடித்து வருகிறார்.

பல மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் வித்தியாசமான மேக்கப் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது.

பாதுகாப்பு ஏற்பாடு

பாதுகாப்பு ஏற்பாடு

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கும் முன்பு தலைநகருக்கு அருகே பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. இதில் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி படக்குழுவை சேர்ந்த மூன்று அப்பாவி உயிர்கள் பறிபோனது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே விபத்துக்கு காரணம் என கூறப்பட்டது.

கலங்க வைத்த இயக்குநர்

கலங்க வைத்த இயக்குநர்

தொழிலாளர்களை பற்றி கவலைப்படாத இயக்குநரின் பிரமாண்ட பசியும் பெருமைக்கான ஆசையும்தான் இந்த விபத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இதனால் நொந்துபோன இயக்குநர். அந்த விபத்தில் நான் சிக்கியிருக்க கூடாதா என உருக்கமாக பேசி கலங்க வைத்தார். இந்த விபத்தால் தான் தூங்கி பல நாட்கள் ஆகி விட்டது என்று தனது துக்கத்தை பகிர்ந்து கொண்டார்.

ஓரே போடு

ஓரே போடு

அதேநேரத்தில் படப்பிடிப்பில் விபத்து நேரிட்டதற்கு காரணம் நடிகர் தான். அவர் மட்டும் சொன்னப்படி படப்பிடிப்பிற்கு வந்திருந்தால் விபத்து நேர்ந்திருக்காது, அவரது கால்ஷீட் குளறுபடிதான் விபத்துக்கு காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இப்படி ஒவ்வொருவர் மீதும் குற்றச்சாட்டுகள் மாறி மாறி வர, தயாரிப்பு நிறுவனம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவில்லை என ஒரே போடாக போட்டனர்.

நடிகையிடம் பேச்சு

நடிகையிடம் பேச்சு

இதுதொடர்பாக முட்டல்களும் மோதல்களும் ஒரு புறம் இருக்க விசாரணையும் நடைபெற்று வருகிறது. விபத்துக்கு பிறகு படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து படக்குழுவினர் இன்னும் வெளிவராத நிலையில் படக்குழு தள்ளிப்போடப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கலாம் என படக்குழுவை சேர்ந்தவர்கள் அக்கட தேசத்து நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தினராம்.

அடம்பிடிக்கும் நடிகை

அடம்பிடிக்கும் நடிகை

ஆனால் தான் இன்னும் விபத்து நடந்த அந்த அதிர்ச்சியில் இருந்தே மீளவில்லை, அதற்குள் என்னால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என கூறிவிட்டாராம் நடிகை. அதோடு மற்ற நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறாராம். மேலும் எனக்கு பாதுகாப்பு கொடுத்தால் தான் மீண்டும் நடிக்க வருவேன் என்றும் கூறிவிட்டாராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போயுள்ளதாம் படக்குழு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X