தெலுங்கு ரீமேக்கில் நம்பர் நடிகை நடிக்க மறுத்தற்கு காரணம் அது இல்லையாம்.. எல்லாம் மணி மேட்டராம்!

சென்னை: தெலுங்கு ரீமேக்கில் நம்பர் நடிகை நடிக்க மறுத்ததற்கு காரணம் சம்பளம் தொடர்பான சமாச்சாரம்தான் என டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் அந்த நம்பர் நடிகை. முன்னணி நடிகர்கள், டாப் நடிகர்கள், மாஸ் நடிகர்கள் என பலருடனும் ஜோடி போட்டு வருகிறார்.

யாருடன் வேண்டுமானாலும் ஜோடி போடத் தயார், ஆனால் கதைக்கு தூணாக தான்தான் இருக்க வேண்டும் என கறாராக பேசி கட்டுப்பாடுகள் விதித்து வருகிறார்.

4 விரலை காட்டிய நடிகை

4 விரலை காட்டிய நடிகை

இந்நிலையில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள அவார்டு படத்தில் அம்மணி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. முதலில் நடிக்க சம்மதம் கூறிய நடிகை நான்கு விரலை காட்டினாராம். இதனால் மிரண்டு போன தயாரிப்பு தரப்பு அவ்வளவு எல்லாம் கட்டுப்படியாகாது என்றதாம்.

நடிகை பிடிவாதம்

நடிகை பிடிவாதம்

இருந்த போதும் ஒரு கிளாமரான கேரக்டர் என்பதால் அம்மணியிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அந்த மாதிரி ரோலில் நடிப்பதே பெரிய விஷயம் இதில் சம்பளத்தையெல்லாம் குறைக்கவே முடியாது என பிடித்தப் பிடியில் பிடிவாதமாக இருந்தாராம் நடிகை.

அந்த மாதிரி கேரக்டர்

அந்த மாதிரி கேரக்டர்

இதல்லாம் நம்ம பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகாது என்று தடாலடியாக கூறிய தயாரிப்பு தரப்பு வேறு ஒரு முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை நடத்த தொடங்கி விட்டதாம். இந்நிலையில் அந்தமாதிரி கேரக்டரில் நடிக்க முடியாது என கூறிவிட்டதாக கூறி சமாளித்து வருகிறார்களாம்.

உச்சநடிகரின் படம்

உச்சநடிகரின் படம்

தற்போது இயக்குநருடன் ஐக்கியமாகியுள்ள நம்பர் நடிகை இதுபோன்று பலமுறை செய்திகளில் சிக்கியிருக்கிறார். உச்ச நடிகரின் படத்தில் கூட பேமெண்ட் பாக்கியிருந்ததால் ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வர முடியாது என பிடிவாதமாக இருந்தார் என்று செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X