டூயட்தான் பாடுவேன்.. அப்படியெல்லாம் நடிக்க முடியாது.. டாப் ஹீரோவுக்காக அடம்பிடிக்கும் நம்பர் நடிகை!
சென்னை: உச்ச நடிகரின் படத்தில் டூயட் தான் பாடுவேன் என நம்பர் நடிகை அடம் பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரிய நடிகர் பட்டாளத்துடன் உச்ச நடிகரின் அடுத்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தல நடிகரின் ஆஸ்தான இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் சீனியர் நடிகைகள் முதல் தற்போதுள்ள இளம் நடிகைகள் வரை பலர் நடிக்கின்றனர்.
படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தில் நாள் தோறும் ஒருவர் இணைந்து வருகிறார். படத்தில் ஹீரோவை தவிர இப்போது வரை எல்லாமே இரண்டு இரண்டாக தான் உள்ளது.

எல்லாமே டபுள்
சீனியர் ஹீரோயின்கள் இருவர், இளம் நடிகைகள் இருவர், நகைச்சுவை நடிகர்கள் இருவர் என எல்லாமே டபுளாக உள்ளது. கடைசியாக வெளிவந்த டாப் ஹீரோவின் படம் எதுவும் பெரிதாக வசூலை குவிக்கவில்லை என்பதால், இந்த படத்தில் எப்படியாவது பெத்த வசூலை பார்க்க வேண்டும் என்பதற்காக நடிகர்களும் நடிகைகளும் குவிக்கப்படுகிறார்கள் என்ற பேச்சும் இருந்து வருகிறது.

ரசிகர் பட்டாளம்
இந்நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் நம்பர் நடிகை புதிதாக சேர்க்கப்பட்டார். கடைசியாக டாப் ஹீரோவும் நம்பர் நடிகையும் சேர்ந்து நடித்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு நடிகைக்கு என பெரும் ரசிகர் பட்டாளமும் உள்ளது. இதன் காரணமாக அவர் படத்தில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.

நடிகை கோபம்
ஆனால் இந்தப் படத்தில் அவர் டாப் ஹீரோவுக்கு ஜோடியெல்லாம் இல்லை, கோட் போட்டு நடிக்கும் ஒரு கேரக்டர்தான் என்று தகவல் வெளியானது. ஹீரோவுக்கும் தனக்கும் படத்தில் எந்த தொடர்பும் இல்லை என்பதை கேட்டு டென்ஷன் ஆகிவிட்டாராம் நடிகை. நம்பர் ஒன் நடிகையான தன்னை இப்படியா பயன்படுத்துவது என கோபமடைந்தாராம்.

முரண்டு பிடிக்கும் நடிகை
இந்நிலையில் டாப் ஹீரோவுக்கு இணையான கேரக்டராக இல்லாவிட்டாலும், அவருடன் டூயட் பாடும் கதாப்பாத்திரம்தான் வேண்டும், கோட்டெல்லாம் போட்டு பேருக்கு வந்தோம் போனோம் என்று நடிக்க முடியாது என்று முரண்டு பிடிக்கிறாராம் நடிகை. இதனால் ஏன்டா இவரை கமிட் செய்தோம் என தலையில் கையை வைத்துள்ளதாம் படக்குழு.

ஹீரோவுக்கு நெருக்கம்
ஆனாலும் பொறுங்கள், யோசிக்கிறேன், பார்க்கலாம் என பட்டும் படாமல் பேசியிருக்கிறாம் இயக்குநர். இருந்தாலும் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பில் இருக்கிறாராம் நடிகை. இப்படி ஒரு கேரக்டரில் நடித்தால், அடுத்தடுத்து ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே தன்னை அழைப்பார்கள் என்று அச்சப்படுகிறாராம் நடிகை. அதனால்தான் ஹீரோவுக்கு நெருக்கமாக காட்சி கொடுங்கள் என கேட்கிறாராம்.

இதுவும் போய்விட போகிறது
ஏற்கனவே நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களில்தான் நடிப்பேன் என அடம்பிடித்தார் நடிகை. அதோடு நடிகைக்கு கொடுக்கப்படும் சம்பளமும் அதிகம் என்பதால் ஏராளமான பட வாய்ப்புகளை இழந்தார். இந்நிலையில் கிடைத்த இந்த வாய்ப்பையும் தனது பிடிவாதத்தால் இழந்துவிட போகிறார் நடிகை என கிசுகிசுக்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.


Click it and Unblock the Notifications











