உள்ளூர்ல இருந்தா தான வர சொல்வீங்க.. அம்பலமான நம்பர் நடிகையின் பலே திட்டம்.. ஷாக்கில் கோலிவுட்!

சென்னை: பிரபல நம்பர் நடிகை திரைப்பட விழாவில் பங்கேற்காமல் இருக்க போட்ட பலே திட்டத்தை கோலிவுட்காரர்கள் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.

கோடிகளை வாரியிறைத்து படங்களை தயாரிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். பொண்டாட்டி புள்ளைகளின் நகைகள் முதல் குடியிருக்கும் வீடு வரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள் என்பது நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவில்.

கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் கூட தாங்கள் தயாரித்த ஒரு படம் பிளாப்பானதால் தெருக்கோடிக்கு வந்த நிகழ்வுகளும் உண்டு. ஒரு படம் தயாரித்து தியேட்டர்களில் ரிலீஸ் ஆவது என்பது குழந்தையை பிரசவிப்பதற்கு சமம் என்கின்றனர்.

தவிர்க்கும் நடிகைகள்

தவிர்க்கும் நடிகைகள்

அப்படி தயாரிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கவுரவ குறைச்சலாக எண்ணுகின்றனர் சில நடிகைகள். கோடி கோடியாக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகள் சிலர் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர். இதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்த போதும் கூட அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

கடும் எச்சரிக்கை

கடும் எச்சரிக்கை

தாங்கள் நடித்த கடமைக்காக கூட சில நடிகைகள் பங்கேற்பதில்லை. இந்த விஷயத்தில் அதிகம் அடிபடுபவர்கள் முன்னணி நம்பர் நடிகைகள்தான். சமீபத்தில் கூட நம்பர் நடிகை ஒருவர் தான் நடித்த படத்தின் விழாவில் பங்கேற்காமல் டேக்கா கொடுத்தார். இதற்காக தயாரிப்பு தரப்பு கடும் எச்சரிக்கையை விடுத்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்பலமான திட்டம்

அம்பலமான திட்டம்

இந்நிலையில் நடிகை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் டேக்கா கொடுக்க போட்ட பலே திட்டம் அம்பலமாகியிருக்கிறது. அதாவது, படத்தின் விழா நடைபெறும் நாள், நேரம் எல்லாமே தெரியுமாம். ஆனால் ஊரில் இருந்தால் நிச்சயம் விழாவில் பங்கேற்க சொல்லி குடைச்சல் கொடுப்பார்கள் என்று எண்ணிய நடிகை வெளி நாட்டுக்கு பறந்து விட்டாராம்.

சமாளித்துக்கொள்ளலாம்

சமாளித்துக்கொள்ளலாம்

வெளிநாட்டுக்கு சென்று விட்டால் நம்மை யாரும் எதுவும் கேட்க முடியாது யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று யோசித்து வேலை பார்த்திருக்கிறார் நடிகை. அப்படி ஒரு வேளை கேட்டால் முன்னரே திட்டமிடப்பட்டடது அப்படி இப்படி என ஏதாவது சொல்லி சமாளித்து விடலாம் என திட்டம் போட்டாராம் நடிகை.

இப்படி யோசிக்கிறார்களோ?

இப்படி யோசிக்கிறார்களோ?

ஆனால் அவர் போட்ட இந்த திட்டமும் தற்போது அம்பல
மாகிவிட்டது. இதனைக் கேட்டு தயாரிப்பு தரப்பின் கோபம் இன்னும் அதிகரித்திருக்கிறதாம். சம்பளத்தில் கொஞ்சம் பேலன்ஸ் இருந்தாலும் எப்பேர்பட்ட நடிகரின் படமாக இருந்தாலும் முழு பேமென்ட்டையும் கொடுத்தால்தான் ரூமை விட்டே வெளியயே வருவேன் என்று கூறும் நடிகைகள் இதற்கு மட்டும் எப்படிதான் இப்படி யோசிக்கிறார்களோ?!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X