Don't Miss!
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரே டேமேஜ் போஸ்ட்.. அப்படி இப்படி புகார்.. சங்கத்து குரூப்புக்கு சங்கடமான தடை போட்ட அதிகாரி!
சென்னை: ஆக்டிங் சங்கத்து குரூப்புக்கு அதிரடியாகக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறாராம் அந்த அதிகாரி.
ஒற்றுமையாக போய்க்கொண்டிருந்த ஆக்டிங் சங்கத்து ஆட்களுக்குள் கடந்த சில வருடங்களாக அதிரடி பிளவு.
ஒன்றாக இருந்தவர்கள் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக பிரிய, மாறி மாறி குறைசொல்லி கொண்டிருக்கிறார்களாம் இப்போது.
ரொம்ப நேக்கா.. சின்ன இடை தெரியும்படி.. புடவையில் ஹாட் போஸ்.. கவர்ச்சி நேஹா!
வாட்ஸ்அப் குரூப்
இவர்கள் ஒற்றுமையாக இருந்த போது இந்த சங்கத்துக்கென்று ஒரு வாட்ஸ் அப் குரூப்பை ஆரம்பித்து இருந்தார்கள். அது குரூப் இப்போதும் அப்படியே தொடர்கிறது. அதில் கடந்த சில நாட்களுக்கு முன், திடீர் பஞ்சாயத்து. அதாவது அந்த முன்னாள் ஹீரோயின் பற்றி தவறாக ஒரு நடிகர் வார்த்தையை விட, அது தொடர்பாக எழுந்தது அதிரடி பிரச்னை.
முன்னாள் ஹீரோயின்
'நான் வேறு அர்த்தத்தில் சொன்னேன்' என்று நடிகர் சொல்ல, 'அதற்கு இதுதான் அர்த்தம்' என நடிகை பாய, வழக்குத் தொடரப் போவதாக அறிவித்திருந்தார் அந்த முன்னாள் ஹீரோயின். இதையடுத்தும் அந்த குரூப்பில் சில நடிகர், நடிகைகள் பற்றி புகார் சொல்லி வருகிறார்களாம் தொடர்ந்து. வைகை புயலுடன் இணைந்து பல படங்களில் காமெடி செய்துள்ளவர் அந்த சண்டை இயக்குனர்.
சீனியர் நடிகை
சில நடிகர்கள் மீது சமீபத்தில் இவர் கூறிய புகார் பரபரப்பாகி இருக்கிறது. அதில் ஒரு நடிகர், போலீஸ் கமிஷனருக்கு புகார் அனுப்பி இருக்கிறார், அவர் மீது. அடுத்து மேலும் சில பரபரப்பு புகார்கள். சீனியர் நடிகை ஒருவர் மீதும் சில நடிகர்கள் தேவையில்லாத புகார்களை சொன்னார்களாம். இதனால் குரூப் ரணகளமாகி இருக்கிறதாம்.
குரூப்புக்கு போனால்
சிலர் தூண்டுதல் பேரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணி ஆக்டர்களை குறை சொல்ல, குரூப்புக்கு போனாலே, சிலருக்கு குபுக்கென்று கொதிக்கிறதாம் ரத்தம். இந்த விஷயத்தை ஆக்டிங் சங்கத்துக்காக, நியமிக்கப்பட்டிருக்கிற அந்த அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்களாம், சில நடிகர்கள்.
அதிரடி உத்தரவு
மொத்த விஷயத்தையும் கேட்டுக்கொண்ட அந்த அதிகாரி, சில அதிரடி உத்தரவுகளை போட்டிருக்கிறாராம் அந்த குரூப்புக்கு. அதாவது, 'இனி, ஆளாளுக்கு கமென்ட் போடக் கூடாது. அட்மின் யாரோ, அவங்கதான் இதுல பேசணும், கமென்ட் போடணும், வேற எந்த பிரச்னையும் வரக்கூடாது' என்று அதிரடி உத்தரவு போட்டிருக்கிறாராம். சங்கத்துக்கு ஆக்டர்கள் கப்சிப் என்கிறார்கள்.