இதுதான் சான்ஸ்.. எப்படியாவது இழுத்துறனும்.. பிரேக்கப்பான பிரபலத்துக்கு ரூட்டு விடும் சர்ச்சை நடிகை!

சென்னை: காதலியை பிரிந்த பிரபலத்தை வளைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் சர்ச்சை நடிகை.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்றவர் அண்டை நாட்டைச் சேர்ந்த ஆணழகன். தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிய அவருக்கு பிரபல மாடலும் நடிகையுமான ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நடிகையின் வீட்டார் காதலுக்கு பச்சைக் கொடி காட்டி நிச்சயம் வரை சென்றது.

போலீஸ் கோர்ட்

போலீஸ் கோர்ட்

வீட்டிற்கு தெரியாமலேயே நிச்சயம் செய்து கொண்ட ஆணழகன், நடிகையுடன் மூன்று ஆண்டுகள் கணவன் மனைவியாய் வாழ்ந்திருக்கிறார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அந்த அழகனுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க, காதலி நடிகையை கழட்டி விட்டார். இந்த விவகாரம் போலீஸ், கோர்ட் என சென்று விட்டது.

தலைப்பு செய்தி

தலைப்பு செய்தி

இனியும் காதலி நடிகையை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார் அந்த பிரபலம். அதோடு நடிகையின் கற்பு மீதும் சந்தேகப்பட்டு விட்டார். இந்த விவகாரம் தான் கடந்த சில நாட்களாய் மீடியாக்களில் தலைப்பு செய்தியாக இருந்தது.

சாபம்

சாபம்

இதனால் நொந்து போன நடிகை வாழ்க்கையும் போய்விட்டது கேரியரும் போய்விட்டது என புலம்பி வருகிறார். தொடர்ந்து நடிகை மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார். இதனால் சமூக வலைதளங்களிலும் வாங்கிக்கட்டிக் கொள்கிறார் பிரபலம். பெண் பாவம் சும்மா விடாது என அவருக்கு சாபம் விடாதவர்களே இல்லை.

நடிகையுடன் நெருக்கம்

நடிகையுடன் நெருக்கம்

காதலி நடிகையை அவர் பிரிய, டிவி நிகழ்ச்சி மூலம் கிடைத்த சில தோழிகளே என தகவல் வெளியானது. அந்த டிவி நிகழ்ச்சியில் நடிகை ஒருவருடன் ரொம்ப நெருங்கி பழகினார் அந்த பிரபலம். காதலி வெளியே காத்திருக்கும் போது நடிகையுடன் அவர் கொஞ்சி குலாவியது பெரும் சர்ச்சையானது.

அப்போதே ரூட்டு

அப்போதே ரூட்டு

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்ச்சை நடிகை ஒருவர் அப்போதே அவருக்கு ரூட்டு விட்டார். பெற்றோரிடம் வந்து என்னை பெண் கேள் என்றெல்லாம் கூறினார் அந்த சர்ச்சை நடிகை. ஆனால் அப்போது தனக்கு வெளியே ஒரு காதலி இருப்பதாக கூறி கழண்டு கொண்டார் அந்த பிரபலம்.

ரூட்டு விடும் நடிகை

ரூட்டு விடும் நடிகை

இந்நிலையில் தற்போது அவரது காதல் பிரேக்கப் ஆகியுள்ளாதால் அவருக்கு ரூட்டு விட தொடங்கியிருக்கிறாராம் சர்ச்சை நடிகை. ஏற்கனவே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண் போட்டியாளர்களுக்கு என் மீது க்ரஷ் இருந்தது என்று வீடியோ வெளியிட்டிருந்தார் சர்ச்சை நடிகை. இந்நிலையில் எப்படியாவது அவரை வளைத்து விட வேண்டும் என கங்கணம் கட்டியிருக்கிறாராம்.

அட்வைஸ்

அட்வைஸ்

அடிக்கடி போனில் பேசுவது, சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்வது, பேட்டிகளில் அவரை புகழ்வது, புகழ்ந்து பேசும் வீடியோக்களை டேக் செய்வது என இருந்து வருகிறாராம். மேலும் காதலி நடிகைக்கும் காதல் இல்லாத இடத்தில் ஏன் எதிர்பார்க்க வேண்டும் என பொதுவாக அட்வைஸ் செய்கிறாராம் சர்ச்சை நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X