முன்னணி நடிகர் வீட்டில் நடந்த ரெய்டு இதுக்காகத்தானாம்.. அதனாலதான் அதுக்கு பிறகு பேச்சே இல்லயாம்!

Recommended Video

Top actress in Tamil cinema is ready for marriage | Kollywood Gossip

சென்னை: அண்மையில் முன்னணி நடிகர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டுக்கான காரணம் என்ன என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அந்த மாஸ் நடிகர் மற்றும் திரைத்துறையை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் வீட்டில் அண்மையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் பைனான்சியர் வீட்டில் இருந்து மட்டும் கோடி கோடியாக பணம் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நல்ல லாபம் கிடைத்தும் சிலர் படத்தால் பெரும் நஷ்டம் என பொய் கணக்கு காட்டி வருகிறார்களாம்.

நஷ்டம் என கிளப்பி

நஷ்டம் என கிளப்பி

இது திரைத்துறையில் உள்ளவர்களுக்கே தெரிந்திருக்கிறது. ஆனாலும் தெரிந்தும் தெரியாததை போலவே கண்டும் காணாமல் இருந்து வருகின்றனராம். குறிப்பாக வட்டிக்கு விட்டு பணம் பறிக்கும் பைனான்சியரின் பல தில்லாலங்கடி வேலைகள் மேலிடத்திற்கு புகாராக சென்றுள்ளதாம். முன்னணி நடிகர்களை வைத்து படம் பண்ண பணம் கொடுக்க வேண்டியது. பின்னர் அவர்களின் படம் ஓடவில்லை என பெரும் நஷ்டம் என கிளப்பி விட வேண்டியது.

கட்டாயப்படுத்தி

கட்டாயப்படுத்தி

பின்னர் அந்த நடிகரை வைத்தே நஷ்டத்தை ஈடுகட்ட கட்டாயப்படுத்தி படம் பண்ண நெருக்கடி கொடுப்பது என இருந்து வந்துள்ளார். ஒரு முறை பணம் கொடுப்பது போல் கொடுத்து அதையே வைத்து பல கோடிகளை வசூலித்து வருகிறாராம். அல்லது நஷ்டம் எனக் கூறி நடிகரே அதனை ஈடுகட்ட நஷ்ட ஈடு பெற்று தரவேண்டும் என்றும் தூண்டி விடுவதும் அவரின் விளையாட்டுகளில் ஒன்றாகி விட்டதாம்.

பொய் கணக்கு

பொய் கணக்கு

பல கோடிகளை சம்பாதித்து விட்டு அப்படி இப்படி என பொய் கணக்கு காட்டி நஷ்டம் என கூறி வருகின்றனர் சினிமாத்துறையை சேர்ந்த சில புள்ளிகள். சமீபத்தில் உச்ச நடிகரின் படத்தால் நஷ்டம் என புகார் எழுந்தது. அதோடு நடிகரின் வீட்டையும் முற்றுகையிட முயன்றனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே என்னதான் நடக்கிறது என ரெய்டை தட்டி விட்டதாம் மேலிடம்.

டேமெஜ் செய்ய

டேமெஜ் செய்ய

இதனை தொடர்ந்தே அந்த ரெய்டு நடத்தப்பட்டதாம். இந்த ரெய்டுக்கு பிறகு உச்ச நடிகரின் படத்தால் நஷ்டம் என்று கூறியவர்கள் கூட மூச்சு பேச்சு இல்லாமல் உள்ளனர். எல்லாம் அரசியல் தூண்டுதல்தான் காரணம் என்றும் உச்ச நடிகரின் பெயரை டேமெஜ் செய்ய வேண்டும் என்பதற்காக படம் நஷ்டம் என கிளப்பி விடுகிறார்கள் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

ஆண்டவனுக்குதான் தெரியும்

ஆண்டவனுக்குதான் தெரியும்

ஆனால் இந்த ரெய்டுக்கு பிறகு அனைத்து விஷயங்களும் அப்படியே அமுங்கி கிடக்கிறது. தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது என்பது அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம், யார் லாபம் பார்க்கிறார்கள் யார் உண்மையிலேயே நஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிய அடிக்கடி இதுபோன்ற ரெய்டுகளை நடத்த வேண்டும் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X