மாஸ் நடிகருக்கும் மகனுக்கும் முட்டிக் கொள்ள இதுதான் காரணமா?.. தந்தை தயவு இல்லாமலே சாதிப்பாரா?

சென்னை: தனது தந்தையால் திரையுலகுக்கு வந்து பல கஷ்டங்களை அனுபவித்து இன்று முன்னணி நடிகர் வரிசையில் அந்த மாஸ் நடிகர் உள்ளார். ஆனால், அசால்ட்டாக அப்பாவின் சிபாரிசை வைத்து கோலிவுட்டில் இடம் பிடிக்க வாய்ப்பு இருந்தும் வாரிசு அதனை செய்யாமல் இருக்க காரணமே இதுதான் என்கின்றனர்.

மேலும், தந்தைக்கும் மகனுக்கும் அந்த ஒரு பிரச்சனை தான் மோதல் ஏற்படக் காரணம் என்றும் அதனால் தான் அப்பாவின் தயவு இல்லாமலே சாதித்துக் காட்டுவேன் என மகனார் சவால் விட்டுள்ளாதாக கூறுகின்றனர்.

Gossip about Mass actor and his son rivals due to this matter trending talks in Kollywood?

சினிமாவில் என்ட்ரி: பெரிய தயாரிப்பு நிறுவன பேனரில் ஒரு புதிய படத்தை இயக்க மாஸ் நடிகரின் வாரிசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார். முதல் படம் சரியாக வரவேண்டும் என்பதற்காக பல சீனியர் அசோசியேட்டிவ் இயக்குநர்களை அம்மாவே ரெக்கமண்ட் செய்து மகனுக்காக களமிறக்கி உள்ளதாக கூறுகின்றனர்.
அப்பா ஆசிர்வாதம் இல்லை: ஆனால், அப்பாவிடம் எந்தவொரு ஆசிர்வாதமும் வாங்காமலே அனைத்து வேலைகளையும் அம்மாவை வைத்தே அம்மா பிள்ளையான வாரிசு செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், சமீபத்தில் பெயருக்காக நடந்த நிகழ்ச்சியில் கூட அப்பாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்கின்றனர்.

என்ன சண்டை: மாஸ் நடிகர் தனது மகனை தன்னை போலவே ஒரு ஹீரோவாக்கி விட வேண்டும் என நினைத்தாராம். எத்தனை இயக்குநர்களை வேண்டுமானால் வரிசையில் நிக்க வைக்கிறேன் என சொல்லியும் மகனாரின் ரூட்டு தனி ரூட்டு என தாத்தா பாணியை பிடித்த நிலையில், அது ரொம்ப கஷ்டமான வேலை சரியா வராது என மகனை டிஸ்கரேஜ் செய்திருக்கிறார். அதுதான் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட காரணமே என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

சாதிப்பாரா?: ரத்தத்திலேயே வெற்றி ஊறிக் கிடக்கும் நிலையில், தனியாக விட்டாலும் சாதித்து விடலாம் என்கிற நம்பிக்கை வாரிசுக்கு நிறையவே இருக்கு என்கின்றனர். ஆனால், சின்சியராக இல்லை என்றால் சினிமா தூக்கி எறிந்து விடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டால் சாதிக்கலாம் எனக் கூறுகின்றனர். முதல் படம் சரியாக உருவானால் தான் அவரது திறமை வெளிவரும் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X